
TNPL 2025: GD vs TRICHY : டிஎன்பிஎல் தொடரின் 28ஆவது லீக் போட்டியில் வெற்றியோடு 4ஆவது அணியாக பிளே ஆஃப் சென்ற சுற்றுக்கு திருச்சி கிராண்ட் சோழாஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரவிச்சந்திரன் அஸ்வின்,
தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இடம் பெற்ற 8 அணிகளில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் கடைசி இடத்திற்கான போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. மற்ற அணிகள் இந்த தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் 28ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் வெற்றி பெற்றால் சேலம் வெளியேறும் நிலை இருந்தது. அதன்படி, இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் செய்தது.
இதில், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அஸ்வின் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இந்திரஜித் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். மான் ஃபாப்னா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த ஷிவம் சிங் 37 ரன்கள் சேர்த்து நடையை கட்டினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை அதிரடியாக விளையாடிய விமல் குமார் 37 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கே ஈஸ்வரன் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் 151 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி களமிறங்கியது. இதில், வசீம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ் குமார் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், இருவருமே சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஜெகதீசன் கௌசீக் 42 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி வரை போராடிய சஞ்சய் யாதவ் 45 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 55 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். இறுதியில் இந்தப் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது, 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.