சிவாஜி கணேசன் திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!

By manimegalai aFirst Published Oct 1, 2021, 11:11 AM IST
Highlights

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (sivajiGanesan) அவர்களது 94 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் (Chief Minister MK Stalin) அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது 94 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

சிவாஜி கணேசன் பிறந்த தினத்தை, அரசு விழாவாக கடந்த 2018 அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பிரச்சனை அதிகமாக இருந்ததால், அரசு தரப்பிலும், சிவாஜி கணேசன் குடும்பத்தினர் தரப்பிலும் அவரது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாட முடியாத நிலை இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் சற்று கட்டுக்குள் வந்துள்ளதால், இந்த வருடம் சிவாஜி அவர்களின் மணிமண்டபத்தில் வெகு விமர்சியாக கொண்டாடியுள்ளனர்.

சென்னை அடையாற்றில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் மணி மண்டபம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த ஏதுவாக, அனைத்து ஏற்பாடுகளும் அரசு தரப்பில் இருந்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினமே,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, சற்று முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தை சேர்த்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் பிரபு முதல்வர் முதல்வர் முக. ஸ்டாலினுக்கு தன்னுடைய குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!