திரைக்கு வரும் முன்னரே வெற்றி பெற்ற ருத்ர தாண்டவம்… மோகன் ஜி-க்கு ஆதரவாக தீர்ப்பெழுதிய சென்னை நீதிமன்றம்…!

By manimegalai aFirst Published Sep 30, 2021, 8:11 PM IST
Highlights

முழு படத்தையும் பார்க்காமல் கடைசி நிமிடத்தில் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

முழு படத்தையும் பார்க்காமல் கடைசி நிமிடத்தில் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

திரெளபதி இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தல அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டு கதாநாயகனாக நடித்துள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாவதற்கு முன்னரே ஆதரவையும், எதிர்ப்பையும் சம்பாதித்த ருத்ர தாண்டவம், தற்போது தடைகற்களை தாண்டி திரைக்கு வருகிறது.

மதமாற்றம் செய்யும் கும்பல் குறித்து ருத்ர தாண்டவம் படம் எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் அறிந்ததே. டிரெய்லர், ஸ்னீக் பீக் காட்சிகளில் அது உறுதியாக, படத்திற்கு தடைகேட்டு நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டன. அந்தவகையில் ருத்ர தாண்டவம் படத்திற்கு தடைகோரிய வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்தது.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சாம் யேசுதாஸ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தின் டிரைலர் மட்டும் வெளிவந்துள்ளதாகவும், முழு படத்தையும் பார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் மனுதரார் கருத்து இருப்பதாக கூறியுள்ளார்.

திரைப்படம் வெளியாகவுள்ள கடைசி நிமிடத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதால் ருத்ர தாண்டவத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் எந்த தடையுமின்றி நாளைய தினம் ருத்ர தாண்டவம் திரைக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.

click me!