சம்பளத்தை குறைக்க மறுக்கும் நடிகர்கள்... சாட்டையை சுழட்டிய தயாரிப்பாளர்கள் சங்கம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 2, 2020, 5:41 PM IST
Highlights

இதனிடையே மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கொரோனாவிற்கு நெருக்கடியால் முடங்கி கிடந்த சினிமா இப்போது தான் மெதுவாக மூச்சு வாங்க ஆரம்பித்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தற்போது 100 பேருடன் ஷூட்டிங்கை தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் படங்களின் வேலையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

என்ன தான் படப்பிடிப்புகள் திரும்ப தொடங்கினாலும் தயாரிப்பாளர்களின் நிலை இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் உள்ளது. அதனை காக்கும் பொருட்டு, முன்னணி நடிகர்கள், நடிகைகள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டுமென தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தமிழில் சில ஹீரோக்கள் சம்பளங்களை குறைத்துக் கொண்டனர். முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் இதுபற்றி எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

 

இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது?... நிறைமாத வயிறுடன் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!

இதனிடையே மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து 30 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக குழு ஒன்றையும் அமைத்து, படங்களின் செலவுக்கணக்கு குறித்து ஆராய முடிவு செய்தனர். இந்நிலையில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் இருவர் தங்களது சம்பளத்தை குறைக்க மறுத்ததோடு, கூடுதலாக வேறு சம்பளம் பெறுகிறார்களாம். அந்த நடிகர்களின் பெயர் டொவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜ் எனக்கூறப்படுகிறது. இது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் காதுகளை எட்ட, அந்த இரு நடிகர்களும் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ளவில்லை என்றால், அவர்களது படங்களை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கடிதம் அனுப்பியுள்ளது. 
 

click me!