Latest Videos

உச்ச நடிகர்களின் 50-வது படம் ஹிட்டா, ஃபிளாப்பா? ரஜினி, விஜய் செய்யாததை செய்த விஜய் சேதுபதி..

By Ramya sFirst Published Jun 27, 2024, 11:21 AM IST
Highlights

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் 50-வது படம் வெற்றியா அல்லது தோல்வியா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக உச்ச நடிகர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும். குறிப்பாக 25வது படம், 50வது படங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பக்கடும். ஆனால் இதுபோன்ற 50வது படங்கள் ஹீரோக்களுக்கு கை கொடுத்ததா என்றால் அது மிகப்பெரிய கேள்வி தான். அந்த வகையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் 50-வது படம் வெற்றியா அல்லது தோல்வியா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எம்ஜிஆர் :

தனது திரை வாழ்க்கையில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரின் 50-வது படம் நல்லவன் வாழ்வான். பொதுவாக எம்.ஜி.ஆர் படம் என்றாலே 150 நாட்களுக்கு திரையரங்குகளில் ஓடும். ஆனால் நல்லவன் வாழ்வான் படம் 80 நாட்களிலேயே தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது. மேலும் வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய அளவில் லாபம் ஈட்ட வில்லை.

சிவாஜி கணேசன்:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 50-வது படம் சபாஷ் மீனா. இந்த படத்தில் சிவாஜி உடன் சரோஜா தேவி, சந்திரபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளிலும் இது ரீமேக் செய்யப்பட்டது. 

ரஜினி காந்த் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50-வது படம் நான் வாழவைப்பேன். சிவாஜி கணேசன், பண்டரி பாய், கே.ஆர் விஜய் என்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் உருவானது. ஆனால் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

கமல்ஹாசன் :

உலகநாயகன் கமல்ஹாசன் சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்துவிட்டதால், இவர் முன்னணி ஹீரோவாக மாறுவதற்கு முன்பே இவரின் 50-வது படம் வெளியாகிவிட்டது. கமலின் 50-வது படம் மூன்று முடிச்சு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீ தேவி ஆகியோர் நடிப்பில் வெளியான மூன்று முடிச்சு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இதில் கமல் கொஞ்சம் சீன்களில் தான் வருவார்.

விஜய்:

விஜய்யின் 50-வது படம் சுறா. விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. விஜய்யின் கெரியரில் மோசமான விமர்சனங்களை பெற்றது.

அஜித் :

அஜித்தின் 50-வது படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 

விக்ரம் :

விக்ரமின் 50-வது படம் ஐ. ஷங்கர் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் வசூல் ரீதியில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் மாறியது.

விஜய் சேதுபதி :

விஜய் சேதுபதியின் 50-வது படம் சமீபத்தில் வெளியான மகாராஜா படம். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்த நிலையில் வசூல் ரீதியிலும் வெற்றி படமாக இந்த படம் அமைந்துள்ளது. 

click me!