உலக புகழ் பெற்ற நடிகர் மீது பாலியல் புகார்.. ஹோட்டல் அறையில் நடந்தது என்ன? - உதவியாளர் சொன்ன பகீர் தகவல்!

Ansgar R |  
Published : Dec 22, 2023, 02:19 PM IST
உலக புகழ் பெற்ற நடிகர் மீது பாலியல் புகார்.. ஹோட்டல் அறையில் நடந்தது என்ன? - உதவியாளர் சொன்ன பகீர் தகவல்!

சுருக்கம்

Top Hero Accused of Sexual Harassment : கோலிவுட் உலகில் சில வருடங்களுக்கு முன்பு Me Too என்ற விஷயம் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அது ஹாலிவுட் உலகிலும் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான நடிகர் தான் வின் டீசல். ஹாலிவுட் உலகில் இவரும் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்போது அவர் மீது தான், அவருடைய முன்னாள் உதவியாளர் Jonasson என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வின் டீசல் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

நடிகர் வின் டீசல், கடந்த 2010-ம் ஆண்டு ‘ஃபாஸ்ட் ஃபைவ்’ படத்தின் படப்பிடிப்பின் போது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார். அஸ்டா ஜோனாசன் என்ற வின் டீசலின் முன்னாள் உதவியாளர், லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தன் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு உடனடியாக தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். 

ஷண்முகத்துக்கு அடுக்கடுக்கான சர்ப்ரைஸ் தரும் பரணி... கைதாகும் சௌந்தரபாண்டி? அண்ணா சீரியல் அப்டேட்

கடந்த 2010ம் ஆண்டு அட்லாண்டா ஹோட்டல் அறையில் இருவரும் "ஃபாஸ்ட் ஃபைவ்" திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் அந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய உரிமைகோரல் ஆகும், இது பாலியல் குற்றங்கள் என்று கூறப்படும் வழக்குகளில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் காலத்தை நீட்டித்துள்ளது.

"ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்" நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட பிறகு, கடந்த செப்டம்பர் 2010ல் "ஃபாஸ்ட் ஃபைவ்" படப்பிடிப்பின் போது அட்லாண்டாவுக்குச் செல்வதுதான் தனது முதல் பணியாக இருந்தது என்று ஆஸ்டா ஜோனாசன் கூறினார். அப்போது ஒரு நாள், நடிகர் வின் டீசல் தனது மார்பகங்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து முத்தமிட்டதாக ஜோனாசன் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை வின் டீசல் மருத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரின் பாலியல் சீண்டல் அதோடு நிற்கவில்லை என்றும், தான் குளியலறைக்கு சென்றபோது, நிலைமை தீவிரமடைந்தது என்றும் அவர் கூறியுள்ளார். குளியலறைக்கு தன்னை பின்தொடர்ந்த டீசல், அவரது பிறப்புறுப்பை பிடிக்குமாறு அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். மேலும் அவர் அதற்கு இணங்காத பட்சத்தில் அவரை குளியரை சுவற்றில் தள்ளி, அவர் முன்பே சுயஇன்பத்தில் ஈடுபட்டு அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 

16 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதி... கோலிவுட்டில் தயாரிப்பாளராக கோதாவில் இறங்கிய கோடீஸ்வரர் - யார் இந்த பாபி?

டீசல் அங்கிருந்து சென்ற சிறுது நேரத்தில், அந்த உதவியாளரை அங்கு பணியமர்த்திய நிறுவனம் அவரை அழைத்து, அவரை வேலையை விட்டு வெளியேற்றுவதாக கூறியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு #MeToo இயக்கம் தொடங்கியதில் இருந்து, சினிமா துறையினர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டிய பல பெண்களில் ஜோனாசனும் ஒருவர் என்றார் அவர் தரப்பு வக்கீல்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?