Tom Cruise : தவமாய் தவமிருந்த டாம் குரூஸுக்கு முதல் ஆஸ்கர் விருது அறிவிப்பு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Published : Jun 19, 2025, 08:35 AM IST
Actor Tom Cruise (Image source: Instagram)

சுருக்கம்

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பல்வேறு சாதனைகள் செய்திருந்தாலும் அவருக்கு ஆஸ்கர் விருது மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. அவர் அதை தற்போது ஒரு வழியாக வென்றிருக்கிறார்.

First Oscar Award For Tom Cruise : ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவருக்கும் உலகமெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் மிரள வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் அண்மையில் கின்னஸ் உலக சாதனையும் படைத்திருந்தார். நெருப்புடன் அதிக முறை பாராசூட்டில் இருந்து குதித்த நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். டாம் குரூஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஷன் இம்பாசிபிள் தி பைனல் ரெக்கானிங் படத்தில் நடிகர் டாம் குரூஸ் எரியும் பாராசூட்டில் இருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தார்.

ஸ்டண்ட் கலைஞர்களின் உதவி இன்றி டாம் குரூஸே இந்த சாகச காட்சியில் நடித்திருந்தார். இதன்மூலம் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை குதித்த நபர் என்கிற கின்னஸ் சாதனையை டாம் குரூஸ் படைத்திருந்தார். இந்த சாதனைகளெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அவருக்கு ஆஸ்கர் விருது மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இப்படி ஒரு திறமைமிக்க நடிகருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படாவிட்டால் அவ்விருதுக்கே பெருமையில்லை என்று ரசிகர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

டாம் குரூஸுக்கு முதல் ஆஸ்கர் விருது

இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த ஆஸ்கர் விருது தற்போது ஒரு வழியாக டாம் குரூஸுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர் திரைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்பு அறிவித்து உள்ளது. டாம் குரூஸ் மட்டுமின்றி வெயன் தாமஸ், டெப்பி ஆலன் டாலி பார்டன் ஆகியோருக்கும் இந்த கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் டாம் குரூஸ் இதுவரை நான்கு முறை ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். 1990ம் ஆண்டு Born on the Fourth of July என்கிற படத்திற்காகவும், 1997-ம் ஆண்டு Jerry Maguire என்கிற படத்திற்காகவும், 2000ம் ஆண்டு Magnolia என்கிற படத்திற்காகவும், 2023-ல் Top Gun: Maverick படத்திற்காகவும் டாம் குரூஸ் நாமினேட் ஆகி இருந்தார். ஆனால் இந்த நான்கு முறையும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இந்த நிலையில், வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள 16வது கவர்னர்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாக ஆஸ்கர் விருதை பெற உள்ளார் டாம் குரூஸ்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!
சூப்பர்ஸ்டாரின் டைம்லெஸ் மாஸ் மூவீஸ் : மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 10 ரஜினி படங்கள்