Karthigai Deepam : கார்த்திகை தீபம் சீரியல் – எப்போது கோயில் கும்பாபிஷேகம் நடக்கும்? கார்த்திக்கை சுற்றிலும் நடக்கும் மர்மம் என்ன?

Published : Jun 18, 2025, 08:33 PM ISTUpdated : Jun 18, 2025, 08:39 PM IST
Karthigai Deepam Serial

சுருக்கம்

Karthigai Deepam Temple Kumbabishekam Episode in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திகை தீபம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.

கார்த்திகை தீபம்:

Karthigai Deepam Temple Kumbabishekam Episode in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் நெருங்கிவிட்டது. கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் நாள் நெருங்கிவிட்டது. சிரியலில் நாளை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் எப்போது கும்பாபிஷேகம் வைக்கிறார்கள் என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியவரும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி எடுத்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதற்காக கார்த்திக்கின் பாட்டி தனது மகனையும், மருமகள் மற்றும் பேத்திகளை கும்பாபிஷேகத்திற்கு அழைக்க வந்துள்ளார்.

எப்போது கோயில் கும்பாபிஷேகம்:

அதோடு அனைவருக்கும் டிரஸ் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இன்றைய எபிசோடில் கும்பாபிஷேகம் தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரேவதியின் திருமணம் தொடர்பான எபிசோடுகளை கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பு செய்தார்கள். அப்படியிருக்கும் போது இப்போது கும்பாபிஷேகம் தொடர்பான எபிசோடுகள் அதற்கும் மேலாகவே ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிகிறது.

முளைப்பாரி நிகழ்ச்சி:

இது ஒரு புறம் இருக்க கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு கார்த்திக் யார் என்று சாமுண்டீஸ்வரிக்கு தெரியவர வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. அப்படி தெரியவரும் பட்சத்தில் ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் சென்னைக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று தெரிகிறது. அப்படியில்லை என்றால் பாட்டி வீட்டிற்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது.

அம்மாவின் மறைவுக்கு மாமியார் தான் காரணமா?

ஏற்கனவே தனது அம்மாவின் மறைவுக்கு கணவரின் அம்மா தான் காரணம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சூழலில் கார்த்திக் தான் அவரது பேரன் என்ற உண்மை தெரியவருமா அல்லது அந்த போலீஸ் மூலமாக அம்மாவின் மறைவுக்கு யார் காரணம் என்பது பற்றி தெரியவருமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஒன்மேன் ஆர்மி கார்த்திக்

ஜீ5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த தொடர் கார்த்திக் என்ற ஒன்மேன் ஆர்மியை வைத்து தான் இப்போது வரை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் மற்ற நடிகர், நடிகைகள் எல்லாம் அவருக்கு பக்கபலமாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தீபாவின் அம்மாவும், அண்ணியும் வர காரணம் என்ன?

கார்த்திகை தீபம் 2ஆவது சீசனில் தீபாவின் அம்மாவையும், அண்ணியையும் ஏன் உள்ளே கொண்டு வந்தார்கள் என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை. இருந்தபோதிலும் ரேவதிக்கும் அவர்களுக்கும் நல்ல ஒரு அன்பும், புரிந்துணர்வும் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் எல்லாம் கார்த்திக்கிற்கு இதுவரையில் தெரியவில்லை. அப்படி தெரியவரும் போது அவரது ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறி தான்.

கார்த்திக் ராஜின் சகோதரர்கள் எங்கே?

சரி, ரேவதியின் கல்யாணத்திற்கு பாட்டியுடன் சிங் கெட்டப்பில் வந்த கார்த்திக்கின் அண்ணன்கள் ஏன் அதன் பிறகு வரவில்லை. ஒரே ஒரு எபிசோடில் மட்டும் கார்த்திக்கின் 2ஆவது சகோதரர் ஒரு சிறிய ரோலில் வந்திருந்தார். இப்படி கார்த்திகை தீபம் தொடரில் கார்த்திக் மற்றும் ரேவதியை சுற்றிலும் அடுத்தடுத்து மர்மங்கள் சூழ்ந்துள்ளது. இதெல்லாம் எப்போது வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரையில் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்படு கும்பாபிஷேகம் தொடர்பான காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அறைக்குள்ளேயே ஒரு மாதம் முடங்கிய செம்பருத்தி நாயகி.! ஷபானா விவரிக்கும் 'அன்டோல்ட் ஸ்டோரி'!
Ethirneechal Thodargirathu: நடிகை கனிகாவின் அடுத்த அதிரடி மூவ்! எதிர்நீச்சல்' ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி..