எங்க அப்பா இல்லாத குறை இன்னைக்கு தான் எனக்கு தீந்துச்சு... விஸ்வாசம் பார்த்துவிட்டு கண்கலங்கிய பெண்!!

Published : Jan 27, 2019, 10:15 AM ISTUpdated : Jan 27, 2019, 10:25 AM IST
எங்க அப்பா இல்லாத குறை இன்னைக்கு தான் எனக்கு தீந்துச்சு... விஸ்வாசம் பார்த்துவிட்டு  கண்கலங்கிய பெண்!!

சுருக்கம்

அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படங்கள் பொங்கல் பண்டிகை  ஸ்பெஷலாக உலகம் முழுவது பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. பேட்ட படம் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருந்தது. A  சென்டர் ஆடியன்ஸ் முழுவதும் ரஜினியின் பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். 

சென்னையை தாண்டி பி,சி சென்டர்களில் படம் இன்னும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல முக்கிய தியேட்டர்களில் விஸ்வாசம் படம் டாப் லிஸ்டில் இடம் இடம் பிடித்துள்ளது.  ரசிகர்கள் மட்டுமல்ல, பி.சி சென்டர் ஆடியன்ஸ் தாறுமாறான வரவேற்பை கொடுத்தனர். 

விஸ்வாசம் படம் வெளியான திரையரங்குகள் எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றன என்பதே தற்போதைய நிலை. காது வழியாக கேட்ட  விமர்சனங்களால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அஜித் அவரது மகளின் எமோஷனல் காட்சிகள் ரசிகர்கள் மட்டுமல்ல நண்டு சிண்டு முதல் பெரியவர்களை வரை பலரை பெரிதாக கவர்ந்தது. அதுவும் தமிழர் பண்டிகை சமயத்தில், குடும்ப உறவுகளை மையப்படுத்திய  விஸ்வாசம் பி.சி சென்டர் ரசிகர்களுக்காவே செதுக்கப்பட்ட படம் என்றால் மிகையாகாது. தனது ஆசை, தன்னால் இயலாததை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது, அவர்களின் போக்கில் சுதந்திரமாக விட வேண்டும் என்ற மெஸேஜ் அசத்தல். கமெர்ஷியல் படம் என்று பார்த்துக்கொண்டிருந்த பலர் இந்த செண்டிமெண்ட் சமாச்சாரம் எதிர்பாராத  நேரத்தில் புரட்டி விட்டது.

இந்நிலையில், இந்நிலையில் 16 நாட்களை கடந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய தியேட்டரில் படம் பார்த்துவிட்ட வந்த இளம் பெண் "எங்க அப்பா இல்லாத குறை இன்னைக்கு தான் எனக்கு தீந்துச்சு" என கண்கலங்கி கொண்டே சொன்னார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எடுப்பாக தெரிய... மார்பகத்தில் பேட் வைக்க சொல்வார்கள் - கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ஆப்தே
ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்