‘இந்தியாவின் ஒரே ஒரு ஆக்‌ஷன் ஹீரோ என்றால் அது கங்கனா ரனாவத் தான்’...அட்ச்சி தாக்கும் ராம்கோபால் வர்மா...

Published : Jan 27, 2019, 10:04 AM IST
‘இந்தியாவின் ஒரே ஒரு  ஆக்‌ஷன் ஹீரோ என்றால் அது கங்கனா ரனாவத் தான்’...அட்ச்சி தாக்கும் ராம்கோபால் வர்மா...

சுருக்கம்

‘இந்தியாவின் ஆக்‌ஷன் ஹீரோக்கள் அத்தனை பேரும் ஒரு நடிகையின் நடிப்புக்கு முன்னால் பூஜ்யமாகிவிட்டார்கள். ‘மணிகர்னிகா’ படத்தில் கங்கனா ரனாவத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து அப்படியே சிலிர்த்துப் போய்விட்டேன்’ என்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. 

‘இந்தியாவின் ஆக்‌ஷன் ஹீரோக்கள் அத்தனை பேரும் ஒரு நடிகையின் நடிப்புக்கு முன்னால் பூஜ்யமாகிவிட்டார்கள். ‘மணிகர்னிகா’ படத்தில் கங்கனா ரனாவத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து அப்படியே சிலிர்த்துப் போய்விட்டேன்’ என்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அடடே ராம் கோபால் வர்மாவுக்குள்ள  இப்படி ஒரு நல்ல மனுஷனும் இருக்கானா? என்று அவரது ட்விட்டர் பதிவைப் படித்து கிண்டலடிக்கிறது தெலுங்குத் திரையுலகம்.

ட்விட்டர் பதிவுகளில் அதிக பேரை கிழித்துத்தொங்கவிட்ட இந்தியர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் கண்டிப்பாக முதலிடம் ராம்கோபால் வர்மாவுக்குத்தான் என்று சொல்கிற அளவுக்கு சர்ச்சைக்குப் பேர் போனவர் வர்மா. அப்படிப்பட்டவர் நேற்று இரவு போட்ட பதிவு ஒன்றில் ‘மணிகர்னிகா’ நாயகி கங்கனா ரனாவத்துக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார்.

அவரது பதிவில், ‘ப்ரூஷ்லியின் ‘எண்டர் த டிராகனுக்கு அடுத்து இப்போதுதான் ஒரு உண்மையான ஆக்‌ஷன் படத்தையும் ஆக்‌ஷன் ஹீரோவையும் பார்க்கிறேன். [நடுவில் உணர்ச்சி வசப்பட்டு கடுமையான ஒரு கெட்ட வார்த்தை]. இப்படத்தோடு ஒப்பிடும்போது நமது மற்ற ஆக்‌ஷன் ஹீரோக்களையெல்லாம் சாதாரண ஹீரோயின்கள் போல்தான் பார்க்கத்தோன்றுகிறது’ என்று உச்சி முகர்ந்திருக்கிறார் கங்கனா ரனாவத்தை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Con City Review : அடிபொலியாக இருந்ததா அர்ஜுன் தாஸின் கான் சிட்டி - முழு விமர்சனம் இதோ
Ananthan Kaadu Review: கம்பேக் கொடுத்தாரா ஆர்யா? 'அனந்தன் காடு' விமர்சனம் இதோ!