Simbu : நடிகர் சிம்புவின் சம்பளத்துக்கு வேட்டு வைத்த தக் லைஃப் ரிசல்ட்!

Published : Jun 17, 2025, 05:25 PM IST
Simbu

சுருக்கம்

தக் லைஃப் படத்தின் வெற்றியை நம்பி இருந்த சிம்புவுக்கு, அதன் ரிசல்டால் சம்பளத்தை அதிகரிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாம்.

Simbu Salary : தொடர் தோல்விகளால் துவண்டிருந்த நடிகர் சிம்பு, மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மாநாடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடி வசூலித்தது. நடிகர் சிம்புவின் கெரியரில் முதன்முறையாக 100 கோடி வசூலித்த படமும் அதுதான். இதையடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல என அவர் கடைசியாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்விகளை சந்தித்தன. இதனால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் சிம்பு. அந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் தக் லைஃப்.

மணிரத்னம் இயக்கும் படம் என்றால் கதையை கூட கேட்காமல் நடிக்கும் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் இருக்கிறார் என்பதால் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தை பான் இந்தியா அளவில் புரமோட் செய்தனர். ஆனால் படத்தின் ரிசல்ட் அப்படியே தலைகீழாக இருந்தது. சொதப்பலான கதையால் தக் லைஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

சிம்புவின் சம்பளத்துக்கு வந்த சிக்கல்

தக் லைஃப் படத்தின் மீது இருந்த நம்பிக்கையால், அப்படத்திற்கு பின்னர் நடிக்க கமிட்டான படங்களுக்கு சம்பளம் வாங்காமல் அட்வான்ஸ் மட்டும் வாங்கி இருந்தாராம் சிம்பு. ஏனெனில் தக் லைஃப் வெற்றியடைந்தால் சம்பளத்தை அதிகரித்துவிடலாம் என்கிற ஐடியாவில் இருந்திருக்கிறார். ஆனால் அவரது கனவில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது தக் லைஃப் படத்தின் ரிசல்ட். இதனால் சம்பளத்தை அதிகரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் சிம்பு. தக் லைஃப் படத்துக்காக நடிகர் சிம்புவுக்கு ரூ.30 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாம். தற்போது மற்ற படங்களுக்கும் அந்த சம்பளத்தையே அவர் வாங்குவார் என கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு கைவசம் உள்ள படங்கள்

நடிகர் சிம்பு கைவசம் தற்போது நான்கு படங்கள் உள்ளன. அதில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் நெல்சன், கவின் ஆகியோரும் நடிக்கிறார்களாம். இது வடசென்னை படத்தின் முந்தைய பாகமாக உருவாகிறதாம். கென் கருணாஸை வைத்து எடுக்க இருந்த ராஜன் வகையறா என்கிற படத்தை தான் தற்போது சிம்புவை வைத்து படமாக்க உள்ளாராம் வெற்றிமாறன்.

இதுதவிர நடிகர் சிம்புவின் ஐம்பதாவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். அப்படத்தை சிம்புவே தயாரிக்கிறார். அதில் இரட்டை வேடத்தில் சிம்பு நடிக்கிறார். அதில் ஒன்று திருநங்கை வேடம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சிம்புவின் 51வது படத்தை டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதோடு பார்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. அப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?