உங்களுக்கு உதவ... எங்களுக்கு உதவுங்கள்...! கொரோனா பற்றி த்ரிஷா வெளியிட்ட வீடியோ!

By manimegalai aFirst Published Mar 20, 2020, 1:21 PM IST
Highlights

இந்தியா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனா தாக்கத்தில் இருந்து, எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என்பது பற்றி, மத்திய மற்றும் மாநில அரசுகள், பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
 

இந்தியா உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனா தாக்கத்தில் இருந்து, எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என்பது பற்றி, மத்திய மற்றும் மாநில அரசுகள், பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதே சமயம், திரையுலகை சேர்ந்த பிரபலங்களும்... கொரோனா தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை வீடியோ மற்றும், ட்விட்டுகள் மூலம் தங்களுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு பற்றி ஒரு வீடியோவை தமிழில் பேசி வெளியிட்டுள்ளார்.

யுனிசெப் இந்தியாவின் நல்லெண்ண தூதரக அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில்... "கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காமல் இருக்க ,தடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் வந்தால் உடனே கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஷ்யூ பேப்பர்களை மூடி போட்ட குப்பைத் தொட்டியில் போட்டு சரியாக மூட வேண்டும்.

உங்கள் கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தேவையில்லாமல் தொடக்கூடாது. அடிக்கடி  20 செகண்ட் ஒரு முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்

அதிக கூட்டமாக இருக்கும் இடத்தில் இருப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால் அல்லது மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். மேலும் உடனே உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் சுகாதார மையத்தை அல்லது மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும். அப்போது முக கவசம் போட்டுக் கொள்ள வேண்டும்

மேலும் விவரங்கள் தமிழ்நாடு பொது சுகாதார மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். என, உதவிக்கு அழைக்கும் எண்களை கூறியுள்ளார். கடைசியில் உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் என கொரோனா விழிப்புணர்வு பேச்சை முடித்துள்ளார் த்ரிஷா.

அந்த வீடியோ இதோ...

 

உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது?
India நல்லெண்ண தூதர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள்.
க்கு எதிராக பாதுகாப்பாக இருங்கள். pic.twitter.com/5V4E05UfhQ

— UNICEF India (@UNICEFIndia)

 

click me!