ஜெயிலர் திரைப்படத்தின் 50-வது நாளை கொண்டாடும் விதமாக தூத்துக்குடியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படத்தை இலவசமாக திரையிட்டனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவர்களுடன் வஸந்த் ரவி, மிர்ணா, ஜாபர், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதுதவிர மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். அனிருத் இசையமைத்த இப்படத்திற்கு விஜய் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் பட்டி தொட்டி யெங்கும் பட்டையகிளப்பி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்... ஜவான் படத்தை பார்த்து மெர்சலாயிட்டாங்க... அதிரடியாக வந்த ஹாலிவுட் வாய்ப்பு குறித்து மனம்திறந்த அட்லீ
ஜெயிலர் படத்தின் 50-வது நாள் விழாவை கொண்டாடும் விதமாக தூத்துக்குடியை சேர்ந்த ரஜினி ரசிகர்கள், அங்குள்ள ரீ பாலகிருஸ்ணா திரையரங்கில் சுமார் 170-டிக்கெட்கள் புக் செய்து அதனை மாற்றுதிறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கண்டுகளிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். மேலும் அங்கு படம் பார்க்க வந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஸ்நாக்ஸும் இலவசமாக வழங்கப்பட்டது.
திரைப்படம் தொடங்குவதற்கு முன் திடீரென ஜெயிலர் பட ரஜினிகாந்த் போல் வேடமணிந்து திரையரங்கிற்குள் வந்த ரஜினி ரசிகர் ஒருவர் அங்கிருந்த மாற்றுதிறனாளிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் போல் ஸ்டைலாக செய்கை செய்து ரஜினிகாந்த் போல் அங்கும் இங்கும் நடந்து சென்று திரையரங்குகளில் இருந்த மாற்றுதிறனாளிகளை உற்சாகப்படுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் போல் இருந்த அந்த ரசிகருக்கு மாற்றுதிறனாளிகள் கைதட்டி ஆரவாரமாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படம் மாற்றுதிறனாளிகளுக்கு திரையிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிரடியாக மாற்றிய நெட்பிளிக்ஸ்... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு