பட்ட அவமானத்தை மறைக்க டிராப் ஆன படத்தைக் கையிலெடுத்த பிரசாந்த் தியாகராஜன்

Published : Nov 17, 2018, 11:39 AM ISTUpdated : Nov 17, 2018, 12:39 PM IST
பட்ட அவமானத்தை மறைக்க டிராப் ஆன படத்தைக் கையிலெடுத்த பிரசாந்த் தியாகராஜன்

சுருக்கம்

தெலுங்குப் படத்தில் பிரசாந்த் கதாநாயகனுக்கு எடுபிடியாக வந்த செய்திகள் கடந்த வாரம் வைரலானதைத் தொடர்ந்து, ஏறத்தாழ கைவிடப்பட்ட ஒரு பிரசாந்த் படத்தைக் கையிலெடுத்தார் அவரது தந்தை தியாகராஜன்.

தெலுங்குப் படத்தில் பிரசாந்த் கதாநாயகனுக்கு எடுபிடியாக வந்த செய்திகள் கடந்த வாரம் வைரலானதைத் தொடர்ந்து, ஏறத்தாழ கைவிடப்பட்ட ஒரு பிரசாந்த் படத்தைக் கையிலெடுத்தார் அவரது தந்தை தியாகராஜன்.

ராம் சரணின் தெலுங்குப் படமான ’வினய விதேய ராமா’வில் செகண்ட் ஹீரோ போல ஒரு பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்பிரசாந்த். ஆனால் இதுவரை வெளியான  படம் குறித்த செய்திகளில் பிரசாந்துக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. இதைக்கண்டு பிரசாந்தின் ரசிகர்கள் பெரும் சஞ்சலத்துக்கு ஆளாகியிருந்த நிலையில், கடந்த வாரம்  வெளியிடப்பட்ட ‘வினய விதேய ராமா’ டீஸரிலும் சும்மா ரெண்டே ரெண்டு ஷாட்களில் பிரசாந்த் ராம்சரனுக்கு பின்னால் நடந்து வந்து காணாமல் போனார். 

இதை தமிழ் ஊடகங்கள் அநியாயத்துக்கு ஊதிப் பெரிதாக்கின. ஏற்கனவே தன்மேல் ஒரு புகைப்படக்கலைஞி ‘மி டூ’ புகார் கொடுத்திருந்த நிலையில் இப்படி அவமானத்துக்கு மேல் அவமானமா என்று நொந்துபோன தியாகராஜன், இரண்டு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ‘ஜானி’ என்ற படத்தை கையில் எடுத்து, அப்படத்தின் ட்ரெயிலரை மீண்டும் அவசர அவசரமாக வெளியிட்டிருக்கிறார்.

அந்த ட்ரெயிலரை இதுவரை சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்திருப்பதாகவும், இன்னும் ஒரு இருபது லட்சம் பேர் பார்க்க விரும்பிக் காத்திருப்பதாகவும் தியாகராஜனும், பிரசாந்தும் பேசிக்கொள்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!
மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்