அ.தி.மு.க. பாணியில் உணவுப்பொட்டலத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய ரஜினி ரசிகர் மன்றத்தினர்

Published : Nov 17, 2018, 11:04 AM IST
அ.தி.மு.க. பாணியில் உணவுப்பொட்டலத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய ரஜினி ரசிகர் மன்றத்தினர்

சுருக்கம்

அ.தி.மு.க. அமைச்சர்கள் பாணியில், வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்ட உணவுப்பொட்டலங்களில் ரஜினி படங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலில் ஈடுபடும் தனது மன்றத்தினருக்கு இதுவரை சூப்பர் ஸ்டார் எந்தவித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட எந்த பேரிடர்களுக்கும் உதவிக்கரம் நீட்டாத ரஜினி ரசிகர் மன்றம், தலைவர் அரசியலுக்கு அருகே வந்துவிட்டதை கணக்கில்கொண்டு,  இம்முறை தஞ்சை, நாகப்பட்டினம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு பகுதிகளுக்கு உனவுப்பொட்டலம் வழங்கினர். இவர்களை வாழ்த்தி ட்விட் பண்ணிய ரஜினியும் இந்தச் சேவை இனியும் தொடரட்டும் என்றும் அவர்களை ஊக்குவித்தார்.

ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் நாங்கள் அ.தி.மு.க.வின் ஸ்டிக்கர் பாய்ஸுக்கு கொஞ்சமும் சளைத்தவ்ர்கள் அல்ல என்று நிரூபிப்பதுபோல் உணவுப்பொட்டலங்கல் முழுக்கவே ரஜினியின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. 50க்கும் மேற்பட்ட உயிர்கள் வெள்ளத்திற்கு பலியான நிலையில் அந்த ஸ்டிக்கர் ஒட்டுன நேரத்துல இன்னும் கொஞ்ச ஜனத்துக்கு உணவு கொடுத்து உதவியிருக்கலாமே என்று விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தனது மன்றத்தினரின் இச்செயலைக் கண்டித்து ரஜினி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!
அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!