“இது சூர்யா, ஜோதிகா, சிவக்குமாரின் கூட்டுச்சதி”... மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 14, 2020, 6:55 PM IST
Highlights

இந்நிலையில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் நிலைய ஆணையரிடம் வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கிடையே தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வுகள் நடைபெற்றன. நீட் தேர்வுக்கு எதிராக பல அமைப்புகள் தேர்வு மையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.


இந்நிலையில், நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், “சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் . சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும்  நீதிமன்றத்தின் நேர்மையையும் சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.  சூர்யாவின் இந்த கருத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் விட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார்.

 

இதையும் படிங்க: கொசுவலை போன்ற மெல்லிய புடவையில் அனிகா... தேவதையாய் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்...!

அந்தக் கடிதத்தில் கொரோனாவுக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற சூர்யாவின் வாசகங்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து  சூர்யாவின் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ​ நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போலவே, நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும்,  4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் உயர் நீதிமன்றத்தின் 6 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும் எனவும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 

இதையும் படிங்க:  நைட்டியில் கூட நயன்தாரா இவ்வளவு அழகா?... விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டோவை பார்த்து விக்கி நிற்கும் ரசிகர்கள்!

இந்நிலையில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை காவல் நிலைய ஆணையரிடம் வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடிகர் சூர்யா, அவருடைய மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் ஆகியோர் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கூட்டுசதி செய்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், நீதிபதிகள் எல்லாம் பயந்து கொண்டு காணொலி மூலம் நீதி வழங்குகிறார்கள் என நீதிமன்றத்தின் மாண்பையும், கண்ணியத்தையும் கெடுக்கும் விதமாக பேசியுள்ளனர். இவர்கள் உறுதியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக வேண்டும். நீதிமன்றத்தை விமர்சித்த இவர்கள் மீது புகார் அளித்துள்ளேன், நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார் என தெரிவித்துள்ளார். 

click me!