ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்..! சூர்யாவின் அடுத்த அதிரடி ட்விட்..!

By manimegalai aFirst Published Sep 14, 2020, 6:09 PM IST
Highlights

நீட் தேர்வு பயம் காரணமாக,நேற்று முன் தினம் அடுத்தடுத்து  3 மாணவர்கள், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில்,  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. 
 

நீட் தேர்வு பயம் காரணமாக,நேற்று முன் தினம் அடுத்தடுத்து  3 மாணவர்கள், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில்,  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. 

இந்நிலையில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா மிகவும் கட்டமாக நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தாலும், சிலர் தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள். 

சூர்யா வெளியிட்ட இந்த அறிக்கை குறித்த பரபரப்பு இன்னும் அடங்குவதற்குள், தன்னுனடய ட்விட்டர் பக்கத்தில், அடுத்த ட்விட் ஒன்றை போட்டு, பலரது பேராதரவையும் பெற்றுள்ளார் சூர்யா.

மேலும் ’ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம்’ என்று அந்த டுவிட்டில் கூறிய சூர்யா, கல்வியை பாதியில் விட்ட மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அகரம் பவுண்டேஷனில் பதிவு செய்துள்ளனர் என்றும் இதுவரை வந்த 3030 விண்ணப்பங்கள் தன்னார்வலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது என்றும் இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து விரைவில் அகரம் மூலம் படிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சூரரை போற்று படம் ஓடிடியில் வெளியாக பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்த போதிலும், படம் விற்ற லாபத்தில் இருந்து,  ஏழை மாணவர்களின் கல்வி உள்பட சமூக சேவைக்காக அவர் ரூ.3.5 கோடி ஒதுக்கியுள்ளார்.

ஒன்றிணைவோம்... மாணவர்களோடு துணை நிற்போம்... pic.twitter.com/ZTIZN5rQCA

— Suriya Sivakumar (@Suriya_offl)

click me!