“தியேட்டர் இல்லாட்டி என்ன ஓடிடி இருக்கு”... திரையரங்கு உரிமையாளர்களுக்கு நேரடி மிரட்டல் விடுத்த பாரதிராஜா...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 14, 2020, 3:29 PM IST
Highlights

நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பது எல்லாம் தனி விஷயம். அது அவர்களுக்கு தேவையில்லாதது. 

இன்று பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சங்க நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய பாரதிராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பில்லை என்றால் என்ன செய்ய முடியும். படங்களை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று தான் நாங்கள் ஆசைப்படுகிறோம். ஆனால் நீங்கள் அடாவடித்தனமாக சில விஷயங்களை செய்யும் போதும், எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களுக்கும் தொழில் சுதந்திரம் உண்டு. 

 

இதையும் படிங்க: கொசுவலை போன்ற மெல்லிய புடவையில் அனிகா... தேவதையாய் ஜொலிக்கும் வைரல் போட்டோஸ்...!

தியேட்டர்களை வேண்டுமென்றால் கல்யாண மண்டபம் ஆக்கிக்கொள்ளுங்கள், மாநாடு நடத்திக் கொள்ளுங்கள் அது உங்க இடம், எங்க படங்களை திரையிடும் போது தான், அந்த கட்டிடத்திற்கே பெருமை. எங்க படம் இல்லைன்னா  அது வெறும் கட்டிடம் தான். அதை நீங்க என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் இன்னொரு வழியை தேடமாட்டோம். விஞ்ஞான வளர்ச்சியில் சினிமாவிற்கு இன்னொரு வழிகூட பிறக்கும். இன்றைக்கு ஓடிடி வந்துள்ளது. நாளைக்கு இன்னொரு வழி வரலாம். இப்போதுள்ள லாபத்தை விட அதிக லாபம் என்றால், நாங்கள் அங்குதான் செல்வோம். வியாபாரம் என்பது கணிசமான லாபத்துக்குப் பண்ணுவதுதான். நஷ்டத்திலா பண்ண முடியும்.

 

இதையும் படிங்க: இயக்குநர் அட்லி வீட்டில் எதிர்பாராத விதமாக நடந்த சோகம்... துக்கத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு...!

நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுப்பது எல்லாம் தனி விஷயம். அது அவர்களுக்கு தேவையில்லாதது. தயாரிப்பாளர்கள் இதை குறைக்க வேண்டும், அதை குறைக்க வேண்டும் என சொல்வதற்கு நீங்கள் யார்? என காட்டமாக கேள்வி எழுப்பிய பாரதிராஜா, லாக்டவுனுக்கு பிறகு தியேட்டர்கள் திறந்த உடன் சின்னப்படங்களை கொடுக்கிறோம் அதை முதலில் திரையிட தைரியம் இருக்கா?. சூர்யா, அஜித், விஜய் படங்களை கேட்க கூடாது  என புது கன்டிஷனை போட்டுள்ளார். 

click me!