ரிலீசாகியது துருவ நட்சத்திரம் டீசர்; நீங்க யாரு எங்க டீசரை ரிலீஸ் செய்ய? நாங்களே ரிலீஸ் பண்றோம்;

 
Published : Jun 05, 2018, 03:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
ரிலீசாகியது துருவ நட்சத்திரம் டீசர்; நீங்க யாரு எங்க டீசரை ரிலீஸ் செய்ய? நாங்களே ரிலீஸ் பண்றோம்;

சுருக்கம்

this productions released the teaser of their upcoming movie

விக்ரம் நடிப்பில் பிரம்மண்டமாக தயாராகி வரும், மற்றுமொரு திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ராதிகா சரத் குமார், திவ்ய தர்ஷினி, சிம்ரன், ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் போன்ற பல திரைத்துறை நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏழு வெவ்வேறு நாடுகளில் வைத்து நடைபெற்று வந்தது. துருவ நட்சத்திரம் படத்தின் முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்போது அதன் இரண்டாவது ரீசரை ரிலீசாக்கி இருக்கின்றனர் துருவ நட்சத்திரம் குழுவினர்.

இந்த இரண்டாவது டீசரை துருவ நட்சத்திரம் குழுவினர் வெளியிடுவதற்கு, முன்பாகவே யாரோ ஒருவர் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த சம்பவம் துருவ நட்சத்திரம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ரிலீஸ் செய்ய தயாராகி வந்த டீசரை யாரோ திருடி வெளியிட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் படக்குழு, இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றனர்.

இதை தொடர்ந்து தான் லைகா நிறுவனம், இன்று மதியம் 12 மணி அளவில், அவசர அவசரமாக இந்த இரண்டாவது டீசரை வெளியிட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ராதிகா சரத்குமார், கெளதம் மேனன் இந்த விஷயத்தை பார்த்து கொள்வார் என தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் தான் விக்ரம் நடித்திருக்கும், சாமி ஸ்கொயர் படத்தின் டிரெயிலர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் டீசர், எல்லா வகையிலும் சாமி ஸ்கொயரை விட நன்றாகவே இருக்கிறது.  மேலும் இந்த டீசர் பாரட்டும் படியாகவே இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிழிந்த ஆடை அணிந்த டாக்ஸிக் நடிகை: விலை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!
ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!