உலக அளவில் சூப்பர் ஹிட்டான அவதார் 2 படத்தின் பட்ஜெட் இவ்வளவா?

Asianet News Tamil  
Published : Sep 28, 2017, 11:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
உலக அளவில் சூப்பர் ஹிட்டான அவதார் 2 படத்தின் பட்ஜெட் இவ்வளவா?

சுருக்கம்

This is the budget of the world super hit Avatar 2 movie?

கடந்த 2009-ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் 'அவதார்'.

சையின் பிக்‌ஷன் திரைப்படமான இதை ஹாலிவுட் முன்னணி இயக்குநர் ஜேமஸ் கேமரூன் இயக்கி இருந்தார்.

உலகிலுள்ள பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்தப் படம் 2500 கோடிக்கு மேல் அமெரிக்க டாலர்களை வசூலித்து உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னிலையில் உள்ளது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போகிறோம் என்று படக்குழு அறிவித்தவுடனே படம் எப்போ வரும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

இதனையடுத்து படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கேமரூன், அதன் ரிலீஸ் தேதியையும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது 'அவதார் 2' படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளார்.

இந்த பாகம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட்டில் உருவாக இருக்குதாம்.  அநேகமாக இந்த பாகம் வெளியான பிறகு வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று பேசி வருகின்றனர்.

முந்தைய பாகத்தின் வசூலை விட இரண்டு மடங்காக உயராலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே 'அவதார் 2' 2020-ஆம் ஆண்டும் டிசம்பர் 18-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உங்களை போன்ற வெறுப்பு கொண்ட மனிதரை நான் பார்த்ததில்லை... ஏ.ஆர்.ரகுமானை வறுத்தெடுத்த கங்கனா ரனாவத்
'என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது'... சர்ச்சைக்கு விளக்கமளித்த ஏ.ஆர்.ரகுமான்