அஜித் பெயரில் மோசடியில் ஈடுபட்ட பிரபலங்கள்... அதிரடி அறிக்கைக்கு காரணம் இதுதான்....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 18, 2020, 11:31 AM IST
அஜித் பெயரில் மோசடியில் ஈடுபட்ட பிரபலங்கள்... அதிரடி அறிக்கைக்கு காரணம் இதுதான்....!

சுருக்கம்

சினிமா பிரபலமாகவே இருந்தாலும் தன்னை பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாத அஜித், இப்படி ஒரு அறிக்கையை வெளியிட காரணம் என்ன என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான அஜித்குமார் நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ​
அதில், நான் அஜித் குமார் அவர்களின் அதிகார பூர்வ சட்ட ஆலோசகர் இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்சிக்காரர் அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும். சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் காட்சிகாரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளது.

இதை முன்னிட்டு என் கட்சிக்காரர் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றி வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற மக்கள் பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

மேலும்‌ தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும்‌ அணுகினால்‌ அந்த தகவலை  சுரேஷ்‌ சந்திரா அவர்களிடம்‌ உடனடியாக தெரிவிக்க வேண்டும்‌ என்றும்‌ வேண்டுகோள்‌ விடுக்கிறார்‌. 

 

இதையும் படிங்க:  என்னது நடிகர் விஷால் அப்பாவா இது?... 82 வயசிலும் உடம்பை எப்படி கட்டுமஸ்தா வச்சியிருக்கார் பாருங்க....!

இதை மீறி இத்தகைய நபர்களிடம்‌ தன்‌ சம்பந்தமாக யாரும்‌ தொழில்‌ மற்றும்‌ வர்த்தக ரீதியாக தொடர்பில்‌ இருந்தால்‌, அதனால்‌ ஏதேனும்‌ பாதகம்‌ ஏற்பட்டால்,‌ அதற்கு என்‌ கட்சிக்காரர்‌, எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொது மக்களும்‌, இத்தகைய நபர்களிடம்‌ எச்சரிக்கையாக இருக்கும்‌படி கேட்டுக்‌ கொள்கிறார்‌. என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

 

சினிமா பிரபலமாகவே இருந்தாலும் தன்னை பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாத அஜித், இப்படி ஒரு அறிக்கையை வெளியிட காரணம் என்ன என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்திற்கு அவ்வப்போது அவருடன் நெருங்கி பழகும் பிரபலங்கள் சிலரால் சிக்கல் வருவது வழக்கம். அப்படி சமீபத்தில் அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்த திரையுலக பிரமுகர் ஒருவர், சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சீட்டுகளை வாங்கி தருவதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு நிறுத்தாமல் பல பிரபல கல்லூரிகளுக்கு போன் செய்து அஜித் பெயரைப் பயன்படுத்தி மெடிக்கல் சீட் கேட்டுள்ளார். 

 

இதையும் படிங்க: தொடர் சிகிச்சையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்... இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

மற்றொரு பிரபலம் அஜித்தின் அடுத்தப்படத்தை நான் இயக்கப்போவதாக கூறி சில பைனான்சியர்களை அணுகி கோடிகளில் கடன் கேட்டதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் அஜித் காதுகளுக்கு எட்டவே, அவர் தனது வழக்கறிஞரான பரத் மூலம் இப்படியொரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்ற தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!