“அது தலையெழுத்து... மாத்த முடியாது”... புது ஸ்டூடியோவில் முதல் நாளே சர்ச்சையை ஆரம்பித்த இளையராஜா...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 03, 2021, 02:22 PM IST
“அது தலையெழுத்து... மாத்த முடியாது”... புது ஸ்டூடியோவில் முதல் நாளே சர்ச்சையை ஆரம்பித்த இளையராஜா...!

சுருக்கம்

இந்த நேரத்தில் இளையராஜாவிடம் இனி தமிழ் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான பாடல்களை கொடுக்க போகிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இடையிலான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை. அவருடைய அறைக்கு பூட்டு போட்டதில் ஆரம்பித்து நீதிமன்றத்தில் கன்டிஷன்களை அடுக்கியது வரை பிரசாத் ஸ்டூடியோ மீதான அதிருப்தி அதிகரித்தது. கடைசியாக ஒருமுறை பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் தியானம் செய்யவும், தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொள்ளவும் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பிரசாத் ஸ்டூடியோவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட போதும் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 

பிரசாத் ஸ்டூடியோவில் அவர் பயன்படுத்திய அறையே இல்லை என்றும், பொருட்கள் அனைத்தும் குடோனில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதாகவும் கேள்விப்பட்டு இசைஞானி மன உளைச்சலுக்கு ஆளானர். தன்னுடைய அறையே இல்லாத போது அங்கு சென்று என்ன செய்யப்போகிறேன் என பிரசாத் ஸ்டூடியோ செல்லும் திட்டத்தையே கைவிட்டார். அதன் பின்னர் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை அமைக்க திட்டமிட்டு வந்தார். 


கோடம்பாக்கத்தில் உள்ள பழைய பழைய எம்.எம். தியேட்டரை வாங்கி தனக்கான ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார். அதற்கான பூஜை இன்று காலை நடைபெற்றது.  புதிய ஸ்டூடியோவில் முதன் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கான இசை வேலைகள் இன்று முதல் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளன. 

 

இதையும் படிங்க: “பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி ஃபரீனாவின் கணவரை பார்த்திருக்கீங்களா?... ஜோடியாக வெளியிட்ட கலக்கல் போட்டோ..!

இந்த நேரத்தில் இளையராஜாவிடம் இனி தமிழ் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான பாடல்களை கொடுக்க போகிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளையராஜா, “மழை கொட்டுற நேரத்தில் கொட்டப்போகுது. மியூசிக் என்ன நேரத்தில் வருதோ? அதுதான். நாங்க போடுற பாட்டை தான் மக்கள் கேட்டாகனும். அது தலையெழுத்து. மாத்த முடியாது” என பதிலளித்துள்ளார். புது ஸ்டூடியோவிற்கு  பூஜை போட்ட அன்றே இளையராஜா இப்படி பேசியிருப்பது ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி