சந்தானத்தின் 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..!

Published : Feb 03, 2021, 02:13 PM IST
சந்தானத்தின் 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..!

சுருக்கம்

சமீபத்தில் அரசு, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் தொடர்ந்து, அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படைகளின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 'பாரிஸ் ஜெயராஜ் ' படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. அனைகா சோதி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வருடம் டிசம்பர் 1-ந்தேதி வெளியானது.

இதை தொடர்ந்து, வெளியான இந்த படத்தின் ட்ரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லாமல், டீ டோட்ளராக வாழும் கானா பாடகர் சந்தானம், திடீரென எப்படி குடி பழக்கத்திற்கு அடிமையாகிறார். 

அவருக்கு ஏற்பாடு செய்த திருமணம் எப்படி நிற்கிறது, மீண்டும் சந்தானம் திருந்துவாரா? திருமணம் நடக்கிறதா, இல்லையா? என்பதை செண்டிமெண்ட், காமெடி, உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கலந்து பல ட்விஸ்டுகளுடன் உருவாகியுள்ளதை ட்ரைலரை பார்த்தே தெரிந்துகொண்டோம். அதிலும் சந்தானத்தின் டைமிங் காமெடி வேறு லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்தில் அரசு, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் தொடர்ந்து, அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படைகளின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 'பாரிஸ் ஜெயராஜ் ' படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி