“டாக்டர்” பட ரிலீஸ் எப்போது?... சிவகார்த்திகேயன் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்...!

Published : Feb 03, 2021, 11:44 AM IST
“டாக்டர்” பட ரிலீஸ் எப்போது?... சிவகார்த்திகேயன் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்...!

சுருக்கம்

இந்நிலையில் “டாக்டர்’ பட ரிலீஸ் தேதி குறித்து சற்று முன் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது. 

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்தார். 

 

இதையும் படிங்க: “பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி ஃபரீனாவின் கணவரை பார்த்திருக்கீங்களா?... ஜோடியாக வெளியிட்ட கலக்கல் போட்டோ..!

இந்நிலையில் “டாக்டர்’ பட ரிலீஸ் தேதி குறித்து சற்று முன் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மார்ச் 26ம் தேதி டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்பட ரிலீஸ் ஓடிடியா? தியேட்டரா? என ஊசலாடி வரும் நிலையில், டாக்டர் படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

OTT Thriller : கண்ணாமூச்சி விளையாடிய தாய்... அடுத்த நொடியே மாயமான மகள்! ஓடிடியில் திகில் கிளப்பும் வெப் சீரிஸ்
Soundarya Last Words: ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா பேசிய கடைசி வார்த்தைகள் என்ன?