'பிசாசு' பற்றிய நக்கல் கேள்வி..! பயில்வான் ரங்கநாதனை பங்கம் செய்த இயக்குனர் பாலா..!

Published : Feb 03, 2021, 10:50 AM IST
'பிசாசு' பற்றிய நக்கல் கேள்வி..! பயில்வான் ரங்கநாதனை பங்கம் செய்த இயக்குனர் பாலா..!

சுருக்கம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'கனாக்காணும் காலங்கள்' சீரியலில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கி 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் வேட்டையனாக மாறி, தன்னுடைய காமெடியான பேச்சால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் கவின். இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், பயில்வான் ரங்கநாதனை இயக்குனர் பாலா பங்கம் செய்த வீடியோவை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'கனாக்காணும் காலங்கள்' சீரியலில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கி 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் வேட்டையனாக மாறி, தன்னுடைய காமெடியான பேச்சால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் கவின். இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், பயில்வான் ரங்கநாதனை இயக்குனர் பாலா பங்கம் செய்த வீடியோவை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோவாக அறிமுகமாகியுள்ள கவின், அதன்பின்  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் தனது தவறான கேம் யுக்தியால் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த கவின், பின்னர், தன்னுடைய இயல்பான குணத்தையும், நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தி அனைவரின் மனங்களையும் வென்றார். 

பிக்பாஸ் டைட்டில் கைப்பற்றும் தகுதி இருந்தும், லாஸ்லியா ஃபைனல் செல்ல வேண்டும் என்பதற்காக 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு, பிக்பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்றார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... "சினிமா துறையின் ரகசியம் என்று திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் யூ டியூப் சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டியை பார்த்தால் இனி எவரும் அந்த பக்கம் தலை வைத்து கூட படுக்க முடியாத அளவிற்கு பேசிவருவது அனைவரும் அறிந்ததே. புதிதாக சினிமாவில் சேர்ந்து பெரிய ஆளாகவேண்டும் என்று எவரேனும் கனவோடு இருந்தால் இவர் பேசிய வீடியோக்களை ஒருமுறை பார்த்தால் போதும் இன்ஜினியரிங்கே பரவாயில்லை என்று ஓடிவிட தோணும் அந்த வகையில் தன்னை வளர்ந்துவிட்ட துறைகளையே சிலர் நெகட்டிவ் ஆக மட்டுமே சித்தரித்து வளம் வருகின்றனர் மற்றொருவர் புளூ சட்டை மாறன்.. இந்நிலையில் இவர் சினிமா செய்தியாளரும் கூட அதனால் சகல மரியதைகளும், வசதிகளும் கொடுக்கப்படும் அதனால் கேட்கும் கேள்விகள் அனைத்தும் வில்லங்கமாகவே இருக்கும் என்று அவரை சார்ந்தவர்கள் கூறியதுண்டு.  அப்படி 2014ல் இயக்குனர் பாலாவிடம் நக்கலாக கேட்கிறோம் என்ற தோரணையில் கேட்ட கேள்விக்கு பாலா அளித்த பதில்... தற்போது வைரல் ஆகிவருகிறது என்று குறிப்பிட்ட வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

'பிசாசு' படத்தின் ப்ரீஸ் மீட்டிங் போது, அந்த படத்தின் தயாரிப்பாளரான  பாலாவிடம், படம் பெயர் 'பிசாசு' என்பதால் கருப்பு சட்டை, கருப்பு பேண்ட் போட்டு வந்துருகிறீர்களா என கேட்க, இதற்க்கு பாலா பிசாசு கருப்பு சட்டையில் தான் வரவேண்டுமா? பிங்க் நிற சட்டை போட்டு கொண்டு வர கூடாத என, பயில்வான் ரங்கநாதன் அணிந்திருந்த சட்டையின் கலரை கூறி பங்கம் செய்தார். பாலாவின் இந்த நக்கலான பதிலுக்கு கை தட்டல்களால் அரங்கமே அதிர்த்துவிட்டது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!