
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் பல ஆண்டுகளாக இளையாராஜா இசையமைத்து வந்தார். அங்கு அவருக்கென தனி அறையுடன் கூடிய ரெக்காடிங் ஸ்டூடியோ இருந்தது. அந்த ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. திரைப்பிரபலங்கள் பலரும் வாசலில் நின்று போராட்டம் நடத்தியும், பிரசாத் ஸ்டூடியோ தங்களுடைய முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
அதன் பின்னர் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்கும் தன்னுடைய அறைக்கு கடைசியாக ஒருமுறை சென்று தியானம் செய்ய ஆசைப்பட்டார். அதற்காக நீதிமன்றம் வரை சென்ற இளையராஜா, இறுதியில் பிரசாத் ஸ்டுடியோவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒரு வழியாக அந்த பிரச்சனை தீர்ந்து தன் பொருட்களை இளையராஜா எடுத்துச் செல்ல பிரசாத் ஸ்டுடியோஸ் ஆட்கள் அனுமதி அளித்தார்கள். ஆனால் இளையராஜாவின் அறையை தற்போது இல்லை என்றும், அவருடைய பொருட்கள் குடோனில் வீசப்பட்டு சேதமடைந்ததாகவும் செய்தி கிடைத்ததை அடுத்து மிகவும் மனவேதனை அடைந்த இளையராஜா அங்கு செல்லவே இல்லை.
இதையும் படிங்க: “பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி ஃபரீனாவின் கணவரை பார்த்திருக்கீங்களா?... ஜோடியாக வெளியிட்ட கலக்கல் போட்டோ..!
இதனால் இளையராஜா மன உளைச்சலில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று தன்னுடைய புதிய ஸ்டூடியோவை திறக்க உள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள பழைய பழைய எம்.எம். தியேட்டரில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ இன்று திறக்கப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடலை ஒலிப்பதிவு செய்ய உள்ளாராம் இளையராஜா. மீண்டும் இசைஞானியின் இசையில் நனைய தயாராகுங்கள் மக்களே...!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.