“எஸ்.பி.பி.க்கு சிலை வைக்கப்படுமா?”... அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அதிரடி பதில்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 2, 2021, 9:40 PM IST
Highlights

எஸ்.பி.பி.யின் குரலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்துள்ளது. இந்த செய்தி இசை ரசிகர்கள், திரையுலகினர் இடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு தேறி வந்த அவருக்கு செப்டம்பர் 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா நெகட்டிவ் என்று தெரிய வந்தது. இந்நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு எஸ்.பி.பி. செப்டம்பர் 15ம் தேதி காலமானார். 

இதையடுத்து அவருடைய உடல் தாமரைப்பாகத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தனது இனிய குரலில் இசையுலகை ஆண்ட அவருடைய பிரிவை ஏராளமானோரால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எஸ்.பி.பி.யின் குரலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்துள்ளது. இந்த செய்தி இசை ரசிகர்கள், திரையுலகினர் இடையே பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

இந்த சமயத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அரசு சார்பில் தமிழகத்தில் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உரிய கோரிக்கை வந்தால் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு சிலை வைக்க அரசு நடவடிக்கை ர்டுக்கும் என தெரிவித்துள்ளார். 

click me!