
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, தொடர்ந்து மூன்று வருடங்களாக நடத்தப்படவில்லை, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த வருடம் ஜல்லிக்கட்டை நடத்த பலர் ஒன்று திரண்டு போராடினர்.
இந்த போராட்டத்திற்கு பல பொதுமக்கள் , கல்லூரி மாணவர்கள், மாடு பிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் , சமூக ஆர்வலர்கள் , அரசியல் தலைவர்கள் , மற்றும் பல தமிழ் திரையுலக பிரபலங்கள் என சேர்த்து போராடியும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தாமதம் ஆனதால் கடந்த இரண்டு வருடம் போல இந்த வருடமும் ஜல்லிக்கட்டுக்கு உரிய அனுமதி பெறமுடியவில்லை.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய கோரியும் பலர் கருத்து கூறி வரும் நிலையில்.
பீட்டாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய திரிஷா, தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிரானவராகவே அறியப்பட்டார், இதனால் பலர் திரிஷாவை ட்விட்டர் மூலம் மிக மோசமாக விமர்சித்தனர் இதன் காரணமாக திரிஷா ட்விட்டரை விட்டு விலகியதாக ஒரு தரப்பில் கூறப்பட்டாலும், தனது ட்விட்டர் கணக்கை சிலர் ஹக் செய்ததால் ட்விட்டர் விட்டு விலகியதாக உள்ளார் திரிஷா .
ஆனால் உண்மையில் ஒருவர் ரகசிய ட்விட்டர் கணக்கை மற்றவர் ஹக் செய்வது, அவ்வளது எளிதல்ல, இதன் மூலம் திரிஷா சொல்வது பொய் என பரவலாக கூறப்படுகிறது.
மேலும் இதே போல் பீட்டாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த நடிகர் சங்க செயலாளர் விஷால் தீடீர் என ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார்.
இதுக்கு காரணமும், விஷாலை ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் வறுத்தெடுத்தது தான் என கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் பலம் தெரியாமல் வாயை விட்டு, வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாம் என எண்ணித்தான் இந்த இருவரும் ட்விட்டர் கணக்கிற்கு முற்று புள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.