
நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி துவங்க தகுதியற்றவர் என கூறியதாக நேற்று வைரலாக ஒரு தகவல் பரவியது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் சரத்குமாரின் உருவ பொம்மைகள் போன்றவற்றை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் ரஜினி தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு உருவ பொம்மை எரிப்பு என சரத்குமாருக்கு எதிராக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என கோரிக்கையும் விடப்பட்டது.
அதனால் கொஞ்சம் தங்களது கோபத்தை அடக்கிய ரஜினி ரசிகர்கள், சரத்குமார் மீது கடும் கோபத்தில் தான் உள்ளார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஏன் அரசியலில் வருவதற்கு ரஜினி தகுதியற்றவர் என கூறியதற்காக காரணத்தை வெளியிட்டுள்ளார் சரத்குமார் , மேலும் அவர் கூறுகையில் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் பிரமாண்ட விழாவில் ரஜினி பேசியபோது, அரசியலில் அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.
இது தான் சரத்குமாருக்கு கோபத்தை தூண்டியதாக கூறப்படுகிறது இதனால் தான், ரஜினி அரசியக்கு வர தகுதியற்றவர் என்பது போல தான் கருத்தை கவெளியிட்டதாக தெரிவித்த சரத்குமார், ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என நான் நினைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.