’இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள் தியாகராஜன் குமாரராஜா?’...’சூப்பர் டீலக்ஸ்’ குறித்து குமுறும் திருநங்கை...

Published : Mar 30, 2019, 09:33 AM IST
’இதற்காகத்தானே ஆசைப்பட்டீர்கள் தியாகராஜன் குமாரராஜா?’...’சூப்பர் டீலக்ஸ்’ குறித்து குமுறும் திருநங்கை...

சுருக்கம்

ஒரு பக்கம் உலக சினிமாக்களுக்கு தமிழ் சினிமாவின் சவால் என்று வானளாவ புகழப்படும் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ சில கடுமையான வசவுகளையும் சம்பாதித்து வருகிறது.

ஒரு பக்கம் உலக சினிமாக்களுக்கு தமிழ் சினிமாவின் சவால் என்று வானளாவ புகழப்படும் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ சில கடுமையான வசவுகளையும் சம்பாதித்து வருகிறது.

படத்தில் விஜய் சேதுபதியின் திருநங்கை பாத்திரமும் இவ்விதமே இரு வித விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் முகநூலில் மிகவும் பிரபலமானவரான  சகோதரி ப்ரியா பாபு என்கிற திருநங்கை தனது பதிவில்...#சூப்பர்டீலக்ஸ் புரிதலின்மையின் உச்சம்...
எனக்கான கோபம்... அதிர்ச்சி...நேற்று தியேட்டரில் நானும் , சோலுவும் கூனிகுறுகிப் போனோம். 

திரு. விஜய்சேதுபதி அவர்கள் புடவை கட்டிக்கொண்டால் மட்டுமே திருநங்கையர் ஆகி விட மாட்டார். நீங்கள் அவர் மூலம் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் என்பது முக்கியம். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா... தயவு செய்து திருநங்கையரை குறித்து புரிந்து கொண்டு படம் எடுங்கள். 
தமிழ் திரை உலகம் இன்னும் திருநங்கையரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தான் உங்கள் படம் உணர்த்துகிறது. 

பொதுச் சமூகத்தில் பெரும்பான்மை அணியும் முகமூடிகளை அணிந்து திரியாமல் தன் உணர்விற்கு மதிப்பளித்து மிக நேர்மையாக தன் முடிவில் உறுதியாய் நின்று பெண்ணாகிப் போறவள் திருநங்கை. ஒரு பெண்ணை தன் சகோதரியாக மட்டுமே பார்ப்பவள். ஆனால் இதில் மாணிக்கம்(சில்பா) திருமணமாகி , குடும்பம் நடத்தி , குழந்தை.... சே... உங்கள் சினிமா வெற்றிக்கு , கைதட்டலுக்கு வழக்கம் போலவே எங்களை பலிகாடாக்கி விட்டீர்களே..?. தியாகராஜன் குமாரராஜா?

இப்போது தான் சமூகம் கொஞ்சம் திருநங்கையரை புரிந்து கொள்ள துவங்கியிருக்கு. அதற்கும் மண்....
இது பெரிய வார்த்தை தான் ஆனால் எங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்த என்று தெரியல. என்று மிக காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!