
நடிகர் சிம்புவும் - ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. இருவரும் காதலர்களாக சுற்றினார்கள்.
இவர்களின் காதல் அடுத்த கட்டத்தை நோக்கி போவதற்குள், இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனம் ஒற்று பிரிவதாக தெரிவித்தனர். எனினும் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கூறினர்.
அதனை நிரூபிப்பது போல், சில வருட இடைவெளிக்குப் பின் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஹன்சிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் 'மஹா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடிக்கிறார்.
முதலில் அவருடைய கதாபாத்திரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வருவதாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தற்போது 30 நிமிடங்கள் வரை அவர் வரும் காட்சியை அதிகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு நடிக்க வேண்டும் என்று அவரிடம் ஹன்சிகா போன் மூலம் கேட்டுக் கொண்டதாகவும், ஹன்சிகா கேட்பதால் அதனை தவிர்க்காமல் இந்த படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.