காயத்ரி ரகுராம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்..! அதிரடியாக வீட்டை முற்றுகையிட்டு பரபரப்பை ஏற்படுத்திய திருமாவளவன் ஆதரவாளர்கள்...!

By manimegalai aFirst Published Nov 18, 2019, 3:41 PM IST
Highlights

பிரபல நடன இயக்குனரும்,  நடிகையுமான காயத்ரி ரகுராம் அவ்வப்போது ஏதேனும் சில கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தானாகவே பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்.

பிரபல நடன இயக்குனரும்,  நடிகையுமான காயத்ரி ரகுராம் அவ்வப்போது ஏதேனும் சில கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தானாகவே பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான குஷ்புவை சீண்டி பார்க்கும் விதமாக, இவர் சமூகவலைதளத்தில் விவாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து, தற்போது திருமாவளவன் பற்றி அடுக்கடுக்காக பல அவதூறு ட்விட்டுகளை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிஜேபி கட்சியின், தீவிர ஆதரவாளரான காயத்ரி ரகுராம் தற்போது,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனை இந்துக்கள் எங்கு திருமாவளவனை பார்த்தாலும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று பதிவு செய்தது, இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் நான் மோடிக்கு எதிரானவன், ஆனால் சில மதவெறியர்கள் நான் இந்து மதத்திற்கு எதிரானவன் என்பது போன்று சித்தரித்து வருகின்றனர். என்று பேசியிருந்தார். மேலும் என்னை பின்பற்றும் பலர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதற்கு காயத்ரி ரகுராம், சற்றும் சம்மந்தம் இல்லாமல்...  இந்துக்கள் திருமாவளவனை எங்க பார்த்தாலும் செருப்பால் அடிக்க வேண்டும் என ட்விட் போட்டார். இந்த பதிவு தற்போது திருமாவளவன் ஆதரவாளர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், காயத்ரி ரகுராமை எதிர்க்கும் விதமாக 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் திருமாவளவனின் ஆதரவாளர்கள், சென்னை மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பெண்கள் பலர், மிகவும் ஆக்ரோஷமாக... காயத்திரி ரகுராம் போட்ட ட்விட்டிற்காக அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வேண்டும் என்றும், அதுவரை விடமாட்டோம் என கோவமாக கூறினர்.

இந்த போராட்டத்தின் போது சில பெண்கள் காயத்திரி ரகுராம் வீட்டின் உள்ளே நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தை கலைக்க முயற்சி மேற்கொண்டும் போராட்டம் நீடித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"

click me!