விசுவாசத்திற்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கு....

 
Published : Dec 02, 2017, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
விசுவாசத்திற்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கு....

சுருக்கம்

There is a story behind visvasam...

அஜித்தின் 58-வது படத்தின் தலைப்பு வெளியானதால் அவரது ரசிகர்கள் அதனை வரவேற்று உள்ளனர்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் வி வரிசையில், தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை அடுத்த தீபாவளிக்கு வெளியிட முடிவெடுத்துள்ளது படக்குழு.

இந்த நிலையில், அஜித்தின் 58-வது படத்தின் தலைப்பு தொடர்பாக இயக்குனர் சிவாவுடன் தான் அடுத்த படம் என சொன்னதும் சில பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது.

முதலில் வீரம்-2 என்று டைட்டில் வைக்கலாம் என்று முடிவு எடுத்தார்களாம். ஆனால், அப்படத்தின் நிறுவனமான விஜயா புரோடக்ஷன்ஸ் வீரம் பட விஷயத்தால் கிளியரன்ஸ் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

இதனையடுத்து தான், வி என்று ஆரம்பிக்கும் "விசுவாசம்" என்று படத்தின் தலைப்பை வைத்துள்ளனர்.

மேலும், நான்காவது முறையாக தல அஜித் & சிவா இணையவுள்ளார்கள். இவர்கள் இணையும் படத்திற்கு வைத்துள்ள ‘விசுவாசம்’ தலைப்பை "தன்னை உயிராக நேசிக்கும் ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்" என்று அஜித் கூறுவதால் அந்த வைத்துவிட்டனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ