மெர்சல் படத்தின் டிரைலர் வரவே வராதாம் – அடித்துக் கூறும் படக்குழு…

 
Published : Oct 11, 2017, 09:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
மெர்சல் படத்தின் டிரைலர் வரவே வராதாம் – அடித்துக் கூறும் படக்குழு…

சுருக்கம்

The trailer of Mersal is not release

தளபதி நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் டிரைலர் வராது என்று விஜய் ரசிகர்களிடம் படக்குழு தெரிவித்துள்ளது.

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் மெர்சல்.

இதில், சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு உலக சாதனையும் படைத்தது.

இதனைத் தொடர்ந்து டிரைலரை வெளியிட்டால் சாதனை படைக்க காத்திருக்கிறோம் என்று விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் கூறி வருகின்றனர். எனவே, டிரைலரை உடனே வெளியிடுங்கள் என்று டெவிட்டரில் படக்குழுவினருக்கு வேண்டுகோளும் வைத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

ஆனால், படக்குழுவினர்கள் மெர்சல் படத்தின் டிரைலர் வெளியிடும் திட்டம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

மெர்சல் படம் வெளியாக ஒரேயொரு வாரம் மட்டும் இருப்பதால் இப்படத்தின் மீதமுள்ள போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இதனால், மெர்சல் டிரைலரை உருவாக்க நேரமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், இப்படத்தின் புரோமோ வீடியோ அல்லது மெர்சல் ஸ்டில்ஸ் போன்றவை தீபாவளி வரை தினமும் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று படக்குழுவினர் உறுதியளித்து உள்ளனர்.

இதனால் மெர்சல் படத்தின் டிரைலர் இல்லை என்பதற்கு வருத்தப்படுவதா அல்லது மெர்சல் படம் வெளியாகப் போகிறது என்பதற்கு மகிழ்ச்சி அடைவதா என்ற மனநிலையில் உள்ளனர் ரசிகர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?