Dhanush hindi movie : தமிழ் பையன் தனுஷ் ; "Atrangi Re" படத்திலிருந்து வெளியான செகண்ட் சிங்கிள் !!

Kanmani P   | Asianet News
Published : Dec 07, 2021, 10:42 AM IST
Dhanush hindi movie : தமிழ் பையன் தனுஷ் ; "Atrangi Re" படத்திலிருந்து வெளியான செகண்ட் சிங்கிள் !!

சுருக்கம்

Dhanush hindi movie : தனுஷ் நடித்துள்ள பாலிவுட் படம் "Atrangi Re" இருந்து செகண்ட் சிங்கிளாக "Rait Zara Si " என்கிற பாடல் வெளியாகி  ட்ரெண்டாங் நம்பர் ஒன்றாக உள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டவர் நடிகர் தனுஷ். குட்டி, படிக்காதவன் என காதல் நாயகனாக வந்தவர் மாரி, அசுரன், கர்ணன் என மாஸ் நாயகனாக தமிழ் திரை உலகை கலக்கி வருகிறார். பல விருதுகளுக்கு சொந்தக்காரரான தனுஷ்  தமிழை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்தார். 2013- ல் வெளியான Raanjhanaa வை தொடர்ந்து தற்போது "Atrangi Re" படத்தில் தனுஷ் நடித்துள்ளார். 

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள  படம் 'அத்ரங்கி ரே'. கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா பகுதிகளில் நடைபெற்றது. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு தடைபட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. மேலும், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கும் தயாராகவுள்ளது. ஆனால், மீண்டும் அதிகமான கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகாவில்லை. 

 'அத்ரங்கி ரே' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. disney+ hotstar ஓடிடி தளம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. நேரடியாக இந்த ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி  "Atrangi Re" வெளியாகும் என பாடக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்திலிருந்தது ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதன்படி தமிழ் பையனான தனுஷை திருமணம் செய்து கொள்ளும்   சாரா அலிகானுக்கு மேஜிக் மேனாக வரும் அக்ஷய் குமாரையும் பிடித்து போகிறது. இறுதியில்  சாரா அலிகான் கடைசியில் யாருடன் வாழ முடிவு செய்கிறார் என்பதே இந்த படத்தின் கதை என்பது தெரிகிறது. ... இந்த கதை அதிக காமெடியுடனும், கொஞ்சம் சென்டிமெண்டுடனும் நகரும் என்றே தெரிகிறது. 

இந்நிலையில் இந்த படத்திலிருந்தது செகண்ட் சிங்கிளாக "Rait Zara Si " என்கிற பாடல் வெளியாகி  ட்ரெண்டாங் நம்பர் ஒன்றாக உள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!