
பாலிவுட்டில் இருந்து தொலைக்காட்சியில் நுழைந்த பிரபல நடிகையான அங்கிதா லோகண்டே கடந்த 19 டிசம்பர் 1984 அன்று மத்திய பிரதேசத்தின் தொழில்துறை நகரமான இந்தூரில் பிறந்தவர்.. ஆரம்பத்தில் இருந்தே திரைத்துறையில் வருவதை அங்கிதா, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதும் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் காதல் ரத்து செய்து கொண்டனர்.
கிரிக்கெட் தல எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனது அசத்திய திறமையை வெளிப்படுத்தியிருந்த சுஷாந்த் சிங் முன்னதாக ஹிந்தியில் பவித்ரா ரிஸ்தா என்னும்சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியல் தமிழில் திருமதி செல்வம் என்னும் பெயரில் ஒளிபரப்பானது. ஹிந்தியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் சுஷாந்த் சிங்குக்கு ஜோடியாக அங்கிதா லோகண்டே நடித்திருந்தார். ரீல் காதல் ரியல் காதலாக மாற இருவரும் ஆறு வருடம் காதல் வாழ்க்கையில் இணைந்திருந்தனர். பின்னர் சுஷாந்த் உடனான காதலை அங்கிதா முறித்துக்கொண்டார்.
பின்னர் கடந்த வருடம் ஊரடங்கின் போது சுஷாந்த் அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு அங்கிதாவும் கரணம் என சுஷாந்தின் நண்பர்கள் குறி வருகின்றனர். இது குறித்து அங்கிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சுஷாந்துடன் உறவை முறித்துக்கொண்டு அங்கிதா தனது புதிய காதலரான விக்கி ஜெயின் என்பவருடன் தனது புதிய காதல் அத்தியாயத்தை தொடங்கினார். இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்த அங்கிதா - விக்கி ஜெயின் ஜோடி தங்களது 3 வது வருட காதல் நாளை கொண்டாடினர். இந்த புகைப்படங்கள் வைரலாகின.
இதற்கிடையே இருவரும் வரும் 14-ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பான இன்று மும்பையில் நடைபெறும் pre-wedding செலிப்ரேஷனை இருவரும் கொண்டாடி வருகின்றனர்.. இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.