Maanaadu : தனுஷை பின்னுக்கு தள்ளிய சிம்பு : எப்படி தெரியுமா ?

By Kanmani PFirst Published Dec 7, 2021, 7:48 AM IST
Highlights

Maanaadu : சிம்பு நடிப்பில் வெளியாகி திரையரங்கை நிரப்பி வரும் மாநாடு படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பாக இருந்த சிம்புவின் மாநாடு கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழில் அதிகம் வெளிவராத, டைம் லூப் ஜர்னரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை யாரும் எதிர்பாராத பல ட்விஸ்டுகள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி, மிகவும் புத்திசாலித்தனமாக கதைக்களம் அமைத்துள்ளார் வெங்கட் பிரபு என தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

எஸ்.ஜே .சூர்யாவை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, வில்லத்தளத்தில் மிரட்டியுள்ளார். ஒட்டு மொத்த படக்குழுவும் இந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் என்பதும் நன்றாகவே தெரிகிறது.  இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ஐஎம்டிபியில் 10க்கு 9.6 ரேட்டிங்கையும் பெற்றிருந்தது.

ஏற்கனவே இந்த படம் வெளியாகி இரண்டே நாட்களில் சுமார் ரூ.15 கோடி வசூலித்ததாக  படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது  சிம்புவின் மாநாடு ரூ. 75.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் 2021 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த ஐந்து படங்களின் லிஸ்டில் 4-ம் இடத்திற்கு மாநாடு திரைப்படம் முன்னேறி உள்ளது. இதற்கு முன்னதாக வெளியாகிய தனுஷின் கர்ணன் ரூ. 70 கோடியை வசூல் செய்திருந்தது. இந்த வசூலை தற்போது பீட் செய்துள்ளது மாநாடு.

முன்னதாக வெளியாகிஇருந்த மாஸ்டர் ரூ. 250 கோடியுடன் முதல் இடத்திலும், அண்ணாத்த - 150 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், டாக்டர் - 100 கோடியுடன்மூன்றாம் இடத்திலும், மாநாடு - 75.50 கோடியுடன் நான்காம் இடத்தையும், கர்ணன் - 70 கோடி வசூலுடன் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.

click me!