T-Series : யம்மாடியோவ்வ்வ் ..!யூட்யூபில் மாத வருமான 72 கோடியா?..! மிரட்டும் T-Series சம்பாத்தியம்!!

By Kanmani PFirst Published Dec 7, 2021, 8:32 AM IST
Highlights

T-Series monthly income  : T-Series யூட்யூப் நிறுவனத்தின் மாத வருமானம் கிடடத்தட்ட ரூ.75 கோடி என சொல்லப்படுகிறது. இதுவரை 38 கோடியே 32 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை கொண்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூடியூப் காணொளி தளம் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு தனிபர் தனது திறமைகளை உலகெங்கும் பரப்பும் ஊடகமாக இது தொடக்காலத்தில் விளங்கியது. காலம் செல்லச்செல்ல இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமானதுடன், பல்வேறு துறையை சேர்ந்த நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகள் குறித்தும், சேவைகள் குறித்தும் விளக்கும் இடமாக மாறத் தொடங்கியது.

சமீபத்திய ஆண்டுகளாக யூடியூப் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கத்துடன், தங்களது தொழிலை விட்டுட்டு யூடியூப் பக்கங்களை ஆரம்பிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் சாதனை முதல் சமையல் வரை அனைத்து விஷயங்கள் சார்ந்த நிகழ்வுகளும் பார்வையாளராகளை பெரும் நோக்கில் பல ஜாலங்களை காட்டி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த சினிமா-இசை வெளியீட்டு நிறுவனமான டி-சீரிஸின் யூடியூப் பக்கத்தின் வருமானம் குறித்த ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. குல்ஷன் குமார் என்பவரின் தலைமையில் செயல்பட்டு வரும் இந்த யூட்யூப் சேனல் 200 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இதன் நிறுவனர் குல்ஷன் குமார், ஆரம்பத்தில் டெல்லியில் பழச்சாறு விற்பனையாளராக இருந்தவர என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் ,கோலிவுட் என தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படங்களின் பாடல்களை வெளியிட்டு வருகிறது. 

இந்த T-Series யூட்யூப் நிறுவனத்தின் மாத வருமானம் கிடடத்தட்ட ரூ.75 கோடி என சொல்லப்படுகிறது. இதுவரை 38 கோடியே 32 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை கொண்டுள்ளது.

click me!