கண்டமேனிக்கு கலவரம் செய்யும் பாலாஜி..பெண் விவகாரத்தை விடவே மாட்டிங்களா?.

Kanmani P   | Asianet News
Published : Mar 11, 2022, 04:02 PM IST
கண்டமேனிக்கு கலவரம் செய்யும் பாலாஜி..பெண் விவகாரத்தை விடவே மாட்டிங்களா?.

சுருக்கம்

இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் எதிர்போட்டியாளர் முதுகில் இருக்கும் காயினை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. அப்போது ஸ்ருதியை தள்ளி விட்டு காயினை கைப்பற்றுகிறார் பாலாஜி. இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

பிக்பாஸ் காதல் விவகாரம் :

பிக்பாஸ் சீசன் 4 ருக்கும் விறுவிறுப்பை சேர்த்தற்கு பாலாஜி முருகதாஸும் ஒருவர். அவ்வப்போது தடாலடி நடவடிக்கை முகத்தில் அறைந்தார் போல பேச்சு என வீட்டையே அல்லோல படுத்தி வந்தார். இதற்கிடையே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது. பாலாஜியும் - ஷிவானியும் காதலிப்பதாக பேசப்பட்டது. அதற்கேற்ப இருவரும் ஜோடிகளாக சுற்றி திருந்தனர் பின்னர் வெளியில் வந்த பிறகு அந்தர் பல்டி அடித்த இவர்கள்  திடீர் என அண்ணன் - தங்கையாக மாறி ரசிகர்களுக்கே செம்ம ஷாக் கொடுத்தனர்.

மேலும் செய்திகளுக்கு... சின்ன வயதில்..சிம்புவுடன் ஆட்டம் போட்ட பிக்பாஸ் அல்டிமேட் பிரபலம்..

பிக் பாஸ் அல்டிமேட் என்ட்ரி :

ரன்னராக வெற்றி கண்ட பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் 14 முன்னாள் போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களோடு கேபிஒய் சதீஷும் உள்ளனர். இவர்களுக்கான சுவாரஸ்யமான டாஸ்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் -ல் இருந்து மாறுதல் காட்டும் விதமாக அல்டிமேட்டில் கமலுக்கு பதில் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கியுள்ளனர். 

பாலாஜியின் காதல் லீலை : 

அந்த சீசனில் ஷிவானி. இந்த அல்மேட்டில் அபிராமி என படு குஷியாக உள்ளனர் பாலாஜி. ஸ்மோக்கிங் ரூம் ருமரால் பிக்பாஸ் அல்டிமேட் வீடே பற்றி எரிந்து வருகிறது. இதோடு மற்றுமொரு சுவாரஸ்யமாக அபிராமியின் முன்னாள் காதலரான நிருப்பும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார். இதனால் காதல் சுவாரஸ்யம் குடித்தான் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...என்ன பிக்பாஸ் இதெல்லாம்... ஸ்மோக்கிங் ரூமில் நெருக்கமாக இருந்த ஜோடி! பார்த்து பதறிப்போன நிரூப்- ஷாக்கிங் video 

பாலாஜியின் அடாவடி :

அந்த சீசனை போலவே இங்கும் அவ்வப்போது பெண்கள் குறித்து பேசி சிக்கலில் சிக்கி விடுகிறார். பெண் போட்டியாளர்களை பாலாஜி மதிப்பதில்லை என்கிற குற்றசாட்டும் உண்டு. இந்நிலையில் இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் எதிர்போட்டியாளர் முதுகில் இருக்கும் காயினை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. அப்போது ஸ்ருதியை தள்ளி விட்டு காயினை கைப்பற்றுகிறார் பாலாஜி. இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!
துண்ட காணோம், துணிய காணோம் என்று தெரிச்சு ஓடிய வில்லன்ஸ்- அசால்ட்டா ரிவெஞ்ச் எடுத்த கார்த்திக்!