
பட்டி தொட்டியெல்லாம் பிக்பாஸ் :
விஜய் டிவி நிகழ்ச்சியில் பெரும்பாலானவர்களால் விரும்பப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். ரசிகர் பட்டாளமும் அதிகம் தான். இதன் சிறப்பே கமல் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்தே. மற்ற மொழிகளிலும் அங்குள்ள ஸ்டார்ஸ் தான் தொகுத்து வழங்கி வருகின்றனர். கிராமப்புற மக்களையும் நெருங்க கமல் இதை ஆயுதமாக பயன்படுத்தினர் என்று கூட சொல்லலாம். தேர்தல் நேரத்தில் கூட கமல் தொகுப்பாளர் பதவியில் இருந்து விலகவில்லை.
கமல் விலகல் :
கமலுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்ப்பட்ட போதும் வீடியோ கால் மூலம் தொகுத்து வழங்கினார். பின்னர் உடல்நிலை காரணமாக ரம்யா கிருஷ்ணன் களம் இறக்கப்பட்டார். பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட கமல் மருத்துவமனையில் இருந்து நேராக பிக்பாஸ் செட்டிற்கு தான் சென்றார். இவ்வாறு விடாப்பிடியாக பிக்பாஸை பற்றிக்கொண்ட கமல். அல்டிமேட்டை உதறிவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு..."ஏனோதானோ சதீஷ் " புது வரவை குறிவைக்கும் ஹவுஸ்மேட்ஸ்...பிக்பாஸ் அல்டிமேட்டில் இன்று..
பிக்பாஸ் அல்டிமேட் :
வருடம் ஒருமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஒளிபரப்பும் வகையில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்ப பட்டு வருகிறது. தொலைக்காட்சி அளவிற்கு மக்களை சென்று அடைவில்லை என்னும் கருத்தில் கொண்டே அல்டிமேட்டில் இருந்து கமலும், வனிதாவும் வெளியேறி விட்டதாக பேசப்படுகிறது. முந்தைய சீசன்களின் போட்டியார்கள் மீண்டும் போட்டியிடும் இதில் புதிய நபர் என்றால் அது கலக்கப்போவது யார் சதீஸ் தான்.
போகும்வரை போவோம் சதீஷ் :
கலக்கப்போவது யாரு, பட்டாசு உள்ளிட்டவற்றின் மூலம் மக்கள் மனதில் பதிந்த சதீஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து மிகவும் அமைதியாகவே இருந்தார். முன்பு வந்த விஜய் டிவி பிரபலங்கள் முடிந்த மட்டில் ரசிகர்களை என்டர்டெயின் செய்தனர். அந்த வகையில் சதீஷ் மீது அதே அளவு எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சதீஷின் இந்த ஏனோதானோ போக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் சதீஷ் ஜூலி, பாலாஜியை கலாய்க்கும் காட்சிகள் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு... BiggBoss Ultimate: என்ன தாமரை என்கிட்டயே வா...! வந்ததும் வேலையை காட்டிய விஷ பாட்டில்...விளாசும் நெட்டிசன்கள் !
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.