
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடியுள்ள நிலையில், இந்த பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் 'அண்ணாத்த' படத்தின் ஆரம்ப பாடலை எஸ்.பி.பி தன்னுடைய இசையில் பாடியுள்ளார் என்று இமான் தெரிவித்தார்.
அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய நிலையில், கடந்த மே மாதம், ரஜினி நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்ட நிலையில், தனி விமானத்தின் மூலம் சென்னை திரும்பினார். மீதம் இருந்த காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில்... சூப்பர் ஸ்டாருக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல் வெளியாகும் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'அண்ணாத்த' திரைப்படத்தின் இன்ட்ரோ பாடலான இந்த பாடல் வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.