
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விவேக் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இருதய துடிப்பு குறைந்ததை அடுத்து ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விவேக்கின் உட ல் நிலை குறித்து இன்னும் 24 மணி நேரம் கழித்தே உறுதியாக சொல்ல முடியும் என கெடு விதித்திருந்த நிலையில் , இன்று அதிகாலை 4.35 மணி அளவில் மரணமடைந்தார்.
காலை சுமார் 6.30 மணி அளவில் நடிகர் விவேக்கின் உடல் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நாசர், சூரி, இமான் அண்ணாச்சி, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், ஜெய், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் நடிகைகள் ஆர்த்தி, இந்துஜா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான திரைப்பிரபலங்கள் சோசியல் மீடியாவில் தங்களுடைய இரங்கலை பதிவு செய்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விவேக் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட அமரர் ஊர்தியில் நடிகர் விவேக்கின் உடல் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின் மயானம் நோக்கி புறப்பட்டது.
விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலகினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க பங்கேற்றனர். அந்த ஊர்வலத்தில் நடிகர் விவேக்கின் ரசிகர்கள் பலரும் கையில் மரக்கன்றுகளை ஏந்தியபடி பங்கேற்றனர். ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற ஆசையுடன் செயல்பட்டு வந்த விவேக் இதுவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.