நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் துவங்கியது..! ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்பு!

By manimegalai a  |  First Published Apr 17, 2021, 4:31 PM IST

தமிழ் சினிமாவில் 'சின்ன கலைவாணர்' என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் 'பத்மஸ்ரீ' விவேக்கின் இறுதி ஊர்வலம் துவங்கியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
 


தமிழ் சினிமாவில் 'சின்ன கலைவாணர்' என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் 'பத்மஸ்ரீ' விவேக்கின் இறுதி ஊர்வலம் துவங்கியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
    
தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு சமூக சீர்திருத்த கருத்துக்களை புகுத்தி கலைவாணர் N.S.கிருஷ்ணன் வழியில் எடுத்துச்சொல்லி மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் 'சின்ன கலைவாணர்' என அன்போடு அழைக்கப்பட்டவர் காமெடி நடிகர் விவேக். இவரது தனித்துவமான காமெடிக்கு தற்போது வரை பல ரசிகர்கள் உள்ளார். ரஜினிகாந்த், விஜய்,அஜித், சூர்யா, கார்த்தியின் துவங்கி தற்போதைய இளம் ஹீரோக்கள் படங்களிலும் நடித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் 'முன்னாள் குடியரசு தலைவர்' டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின மிகப்பெரும் கனவுகளில் ஒன்றான 'பசுமை தமிழகம்' திட்டத்தை நிறைவேற்றும் வகையில்., தான் முக்கிய பொறுப்பு வகித்து வந்த  "கிரீன் கலாம் அமைப்பு" மூலம் தமிழகம் முழுதும்  1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்து, இடைவிடாது  தொடர்ந்து செயல்பட்டு, கிராமங்கள் , நகரங்கள் , மாநகரங்கள்... உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் எண்ணற்ற இடங்களில் இதுவரை கிட்டத்தட்ட 35 லட்சம்  மரக்கன்றுகள் நட்டு ., சிறந்த சமூக செயல்பாட்டாளராகவும், அதைவிட சிறப்பான மனிதநேய பண்பாளராகவும் செயலாற்றி வந்த 'செயல்வீரர்' நடிகர் பத்மஸ்ரீ விவேக்கின் எதிர்பாராத மரணம் தமிழ் சினிமாத்துறையில்  ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.  அவர் மறைந்தாலும்., நிச்சயம் அவர், நட்டுச்சென்ற  லட்சக்கணக்கான மரங்களை அடுத்த சந்ததிகளுக்காக இங்கு விட்டு சென்றுள்ளார்.

இந்த ஈடு இணையில்லா நடிகரின் மரண செய்தி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் தங்களுடைய நேரிலும் சமூக வலைத்தளம் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தகனம் செய்யப்பட மேட்டுக்குப்பம் மின் மயானத்திற்கு கொண்டு செல்ல படுகிறது.

நடிகர் விவேக்கின் இருந்து ஊர்வலம் சற்று முன்னர் துவங்கிய நிலையில், இதில்... ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள், மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொண்டு பிரியாவிடை கொடுத்துள்ளனர். மேலும் விவேக்கின் இறுதி ஊர்வலம் செல்லும் வழி நெடுகிலும்... மக்கள் கூடி நின்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். இந்த காட்சிகள் நெஞ்சை உருக்கும் விதத்தில் உள்ளது.

click me!