வரலட்சுமியும் விஷாலும் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லைங்க போதுமா?

Published : Nov 02, 2018, 03:53 PM ISTUpdated : Nov 02, 2018, 03:57 PM IST
வரலட்சுமியும் விஷாலும் இந்த ஜென்மத்துல கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லைங்க போதுமா?

சுருக்கம்

நடிகை வரலட்சுமி வயசுக்கு வந்த நாள் முதல், நேற்று ஆந்திராவில் ‘சண்டக்கோழி 2’ சக்சஸ் மீட் நடந்த இந்த நாள் வரை, விஷால் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் மாரத்தான் கேள்வி ‘நீங்களும் வரலட்சுமியின் எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போறீங்க?’ என்பதுதான்.

நடிகை வரலட்சுமி வயசுக்கு வந்த நாள் முதல், நேற்று ஆந்திராவில் ‘சண்டக்கோழி 2’ சக்சஸ் மீட் நடந்த இந்த நாள் வரை, விஷால் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் மாரத்தான் கேள்வி ‘நீங்களும் வரலட்சுமியின் எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போறீங்க?’ என்பதுதான்.

பாவம்... விஷாலும் வரலட்சுமியும் பால்ய பருவத்திலிருந்தே கொஞ்சம் பாசத்துடன் பழகி வருவதால் இருவரும் நீண்ட நெடுங்காலமாக இக்கேள்வியை எதிர்கொண்டு வருகின்றனர். கடைசியாக சுமார் 48 மணி நேரத்திற்கு முன்பு 567 தடவையாக ‘விஷாலை திருமணம் செய்துகொள்வீர்களா என்ற கேள்விக்கு ’இல்லை அவருக்கு ஒரு நல்ல மணப்பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்று கொஞ்சமும் சலிக்காமல் பதிலளித்திருந்தார் வரு என்கிற வரலட்சுமி. 

இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் நடந்த ‘சண்டக்கோழி2’ படம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதே கேள்வியை 678 வது முறையாக எதிர்கொண்ட விஷால்,’ எனது மனதுக்கு நெருக்கமானவர் வரலட்சுமி. நானும் எனது மனதுக்கு நெருக்கமான ஒருவரைத்தான் திருமணம் செய்வது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் அந்த மனதுக்கு நெருக்கமானவர் வரலட்சுமிதானா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது’ என்று சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்.

என்ன சொல்றதுன்னு தோணலை. இந்த செய்திக்கு ஒரு சரியான கமெண்ட் வழங்கும்படி ஐயா கவுண்டமணி அவர்களை எங்கிருந்தாலும் மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' பட கதை இதுதானா? லீக்கான ஸ்டோரி... ஷாக் ஆன படக்குழு..!
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்