
இயக்குனர் பாக்கியராஜின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவர் தலைவராகவே தொடர்கிறார் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பில் கடிதம் தரப்பட்டு உள்ளது.
சர்கார் கதைத்திருட்டு விவகாரத்தில் சங்கத்தின் மூலம் தீர்த்துவைக்க முடியாத நிலையிலும் கோர்ட் வரை சென்று வென்ற கே. பாக்கியராஜ் யாரும் எதிர்பாராத நிலையில் சற்றுமுன்னர், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலிருந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழ்த்திரையுலம் இதுவரை காணாத அளவில் ‘சர்கார்’கதைத் திருட்டு விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பாதிக்கப்பட்ட உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக கடைசிவரை நின்று போராடிய பாக்கியராஜ், முருகதாஸிடம் கதைக்கான அங்கீகாரத்தை கோர்ட் வரை சென்று பெற்றுத்தந்தார். இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் பாக்கியராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் தனக்கு நேர்ந்த சங்கடங்கள், அசெளவுகர்யங்களால் ராஜினாமா செய்வதாக சற்றுமுன் வெளியிட்டிருக்கும் ஒரு கடிதம் மூலம் சொல்லியிருக்கும் பாக்கியராஜ் சங்கத்தின் நலன் கருதி அவற்றை தற்போது வெளியே சொல்லவிரும்பவில்லை என்கிறார்.
இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் அளித்த ராஜினமா கடிதத்தை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும் அவர் தலைவராகவே பதவியில் தொடர்வார் என பொதுச்செயலர் மனோஜ் குமார் கடிதம் கொடுத்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.