’பி.எம்.நரேந்திர மோடி’ படத்தை தேர்தலுக்கு முன் வெளியிட தடை இல்லை...டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி...

By Muthurama LingamFirst Published Apr 1, 2019, 1:57 PM IST
Highlights

பிரதமர் மோடியின் அருமை பெருமைகளைப் பேசும் அவரின் சுய சரிதைப் படமான ‘பி.எம்.நரேந்திரமோடி’ படத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தடை செய்து டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மோடியின் அருமை பெருமைகளைப் பேசும் அவரின் சுய சரிதைப் படமான ‘பி.எம்.நரேந்திரமோடி’ படத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தடை செய்து டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. படத்துக்கு பி.எம் நரேந்திர மோடி எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. நடிகர் விவேக் ஓபராய் இந்தப் படத்தில் நரேந்திர மோடியாக நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம் படத்தை இயக்கிய ஓமங் குமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் மோடி டீ விற்பது, போராடி சிறை சென்றது, நடுரோட்டில் குளிரில் உறங்கிக்கிடப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் வெளியாகியுள்ளன. இந்தப் படம் அடுத்த மாதம் ஏப்ரல் 5 ம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மக்களவை முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஏப்ரல் 5ம் தேதி பி.எம் நரேந்திர மோடி படம் வெளியாவது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன. இந்தப் புகாரை அடுத்து தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் பி.எம் நரேந்திர மோடியின் தயாரிப்பாளர்கள் நான்கு பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

 படத்துக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதி மன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தலுக்கு முன் அப்படத்தை வெளியிட ஆட்சேபிக்கும் காரணங்கள் எதுவும் வலுவாக இல்லை. அதனால் படத்தை வெளியிடலாம்’ என்று தீர்ப்பளித்தனர்.

click me!