கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் உள்நோக்கம்... கொதிக்கும் நடிகர் ராஜ்கிரண்..!

Published : Jul 15, 2020, 12:58 PM IST
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதில் உள்நோக்கம்... கொதிக்கும் நடிகர் ராஜ்கிரண்..!

சுருக்கம்

இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில், யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது

கந்த சஷ்டி கவசம் குறித்த வீடியோ, இந்துக்களிடையே மட்டுமின்றி, மதம் கடந்த தமிழர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ‘’கந்தர்  சஷ்டி கவசம்". ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு,"கந்தர் சஷ்டி கவசம்" என்பது, "ஒரு பாதுகாப்பு அரண்". இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவ ரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன.

இறைவனை நம்பாதோர்க்கு, "நம்பாமை" என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, "நம்புதல்" என்பது, அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான்,மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது.

இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதார சீர்கேட்டோடும்,
உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில், யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!