மெர்சல் கட் அவுட்டால் அடுத்தடுத்து அடிவாங்கும் ரசிகர்கள்...! 

 
Published : Oct 31, 2017, 03:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
மெர்சல் கட் அவுட்டால் அடுத்தடுத்து அடிவாங்கும் ரசிகர்கள்...! 

சுருக்கம்

The Mersal film bundle built in Tirupur fell into unbearable grounds and four people were injured.

திருப்போரூரில் கட்டப்பட்டிருந்த ‘மெர்சல்’ பட பேனர் மழைக்கு தாக்கு பிடிக்காமல் அவிழ்ந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

கடந்த தீபாவளி அன்று பல சர்ச்சைகளை தாண்டி விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் வெளியானது. 

படம் வெளிவரும் முன்பே பல சர்ச்சைகளை மெர்சல் திரைப்படம் சந்தித்தது. அதைதொடர்ந்து படம் வெளிவந்த பின்னரும் ஜி.எஸ்டியால் பல தடைகள் வந்தன. 

காட்சிகளை நீக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வலுத்தது. ஆனால் பல தடைகளையும் தகர்த்தெரிந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

மெர்சல் படம் தான் சர்ச்சைகளை சந்திக்கிறது என்று நினைத்தால் அப்படத்தின் கட் அவுட் கூட சர்ச்சைகளை சந்திக்க ஆரம்பிக்கிறது. 

அதாவது சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் இரண்டாவது வாரத்திற்கான பேனர் கட்டிவிட்டு சென்ற கேரள ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.

அதைதொடர்ந்து சென்னை அருகேயுள்ள திருப்போரூரில் மெர்சல் படத்தின் 30 அடி கட்அவுட் ஒன்றை விஜய் ரசிகர்கள் கட்டியிருந்தனர். 

இந்த கட்அவுட் சரியாக பொருத்தப்படாததால் இன்று திடீரென சரிந்து விழுந்தது. அது அந்த வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது பேனர் விழுந்ததில், அந்த காரில் பயணம் செய்த தேவநாதன் என்பவரது குடும்பத்தினர்களுக்கு காயம் ஏற்பட்டது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி