The Gray Man : தனுஷ் ரசிகர்களை ஏமாற்றிய 'தி கிரே மேன்' ட்ரைலர்! ஊறுகாய் அளவிற்கு நம்ம ஊர் நாயகனின் காட்சி

Kanmani P   | Asianet News
Published : May 24, 2022, 08:07 PM ISTUpdated : May 25, 2022, 09:18 AM IST
The Gray Man : தனுஷ் ரசிகர்களை ஏமாற்றிய  'தி கிரே மேன்'  ட்ரைலர்! ஊறுகாய் அளவிற்கு நம்ம ஊர் நாயகனின் காட்சி

சுருக்கம்

The Gray Man trailer is out now : தனுஷ்  நடித்து முடித்த ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்திலிருந்து ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த காணொளியில் தனுஷின் காட்சிகள் கொஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது, ஹாலிவுட் பாலிவுட் டோலிவுட் என மாஸ் காட்டி வருகிறார் தனுஷ். இவர்  பாலிவுட்டில்  ராஞ்சனா, அங்கு ஷமிதாப், அட்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்துள்ளார். அதோடு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்கிற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.  இதையடுத்து   தற்போது அதே தயாரிப்பு நிறுவனத்தில் தி கிரே மேன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமீபத்தில்'தி கிரே மேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. நடிகர் தனது இன்ஸ்டாகிராமில் போஸ்டரை தனது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதனுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லரின் வெளியீட்டு தேதியும் வெளியிடப்பட்டது. ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ இயக்கிய, தி கிரே மேன் படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் மற்றும் , தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 22ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இந்த படத்தின்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், தனுஷ் மாஸ் லுக்குடன் காணப்பட்டார்.முழுக்க கருப்பு நிற உடையில் தனுஷ் போர்க்களத்தின் நடுவே நிற்பது போல் தோன்றியது. போஸ்டரைப் பகிர்ந்துகொண்டு, "டாம் 'தி கிரே மேன்" என்று எழுதியிருந்தார். அதன்படி தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த காணொளியில் தனுஷின் காட்சிகள் கொஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.   இது குறித்து தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?