
பிக்பாஸில் வெற்றிப் பெற்ற ஆரவ்வை வீட்டிற்கு அழைத்துப் பேசியுள்ளார் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம். உடன் அவரது மனைவியும், நடிகையுமான சுஹாசியும் இருந்தார்.
நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற அனைத்துப் போட்டியாளர்களும் மக்களுக்கு நன்கு பிரபலம் ஆகிவிட்டனர்.
இதனையடுத்து பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் விளம்பர மற்றும் பட வாய்ப்புகளும் வந்து குவியும் வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவை, இயக்குநர் மணிரத்னம் தனது வீட்டிற்கு அழைத்துப் பேசியுள்ளார்.
மணிரத்னம் படத்தில் ஆரவ் நடிக்கிறாரா? அல்லது நட்பு ரீதியான ஒரு சந்திப்பா? என்பதெல்லாம் சஸ்பென்ஸ்.
அது என்ன நட்பு ரீதியான சந்திப்பு என்று கேட்கிறீர்களா?
துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் ‘ஓகே கண்மணி’. இந்தப் படத்தில் பிக் பாஸ் ஆரவ் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நடித்துவிட்டுச் சென்றார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகிவிட்டார் என்பது கொசுறு தகவல்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.